Sunday, March 17, 2024
மேலும்
    Homeஆன்மிகம்"பித்தா பிறை சூடி"- தேவாரப் பாடல் விளக்கம்

    “பித்தா பிறை சூடி”- தேவாரப் பாடல் விளக்கம்

    தேவாரம் என்பது சைவ சமய கடவுளான சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில் முதல் ஏழு திருமுறைகளுள் ஒன்றாகும். இந்த ஏழு திருமுறைகளை திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகிய நாயன்மார்கள் தமிழில் பாடியுள்ளார்கள்.

    அதிலும், பித்தா பிறைசூடீ பாடலை எழுதியவர் சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆவார். இந்த பாடல் பதிகம் திருவெண்ணெய்நல்லூர் திருமுறை பதிகம் ஆகும். இந்த பாடலின் திருமுறை ஏழாம் திருமுறை ஆகும்.

    இறைவன் சிவபெருமான் சுந்தரரை ஆட்கொண்ட சிறப்புடையது திருவெண்ணெய்நல்லூர். இறைவன் முதிய வேதியராய் வந்து வழக்குரைத்து சுந்தரர் தனக்கு அடிமை என்று நிரூபித்து தன்னுடன் அழைத்துச் சென்று அவரை ஆட்கொண்டார். இறைவன் அடியெடுத்துத் தர சுந்தரர் “பித்தா பிறைசூடி” என்ற திருப்பதிகத்தை அருளிய தலம். தலத்தின் பெயர் திருவெண்ணெய்நல்லூர் என்றும் கோவிலின் பெயர் அருட்டுறை என்றும் பதிகத்தில் குறிப்பிடப் பெறுகிறது. அருணகிரிநாதர் இத்தலத்தில் முருகப் பெருமான் மயில் மீது நடனம் புரிதலைக் கண் குளிரக் கண்டு திருப்புகழ் ஒன்றும் பாடியுள்ளார்.

    பித்தா பிறை சூடீ பாடல் வரிகள்:

    பாடல் 1:

    பித்தாபிறை சூடீபெரு
    மானே அருளாளா
    எத்தான்மற வாதேநினைக்
    கின்றேன்மனத் துன்னை
    வைத்தாய்பெண்ணைத் தென்பால் வெண்ணெய்
    நல்லூர் அருட்டுறையுள்
    அத்தாஉனக் காளாயினி
    அல்லேன்எனல் ஆமே.

    விளக்கம் :

    பித்தனே, பிறையைக் கண்ணியாகச் சூடியவனே, பெருமை உடையவனே, பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின் கண்ணதாகிய, “அருட்டுறை” என்னும் திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் தலைவனே, எனது நெஞ்சத்துள் உன்னை அகலாது வைத்தருளினாய், அதனால், எவ்வாற்றானும் உன்னை மறவாமலே நினைந்து, முன்பே உனக்கு அடியவனாகி, இப்பொழுது, “உனக்கு அடியவன் அல்லேன்” என எதிர் வழக்குப் பேசியது பொருந்துமோ.

    பாடல் 2:

    நாயேன்பல நாளும்நினைப்
    பின்றிமனத் துன்னைப்
    பேயாய்த்திரிந் தெய்த்தேன்பெற
    லாகாவருள் பெற்றேன்
    வேயார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
    நல்லூர் அருட்டுறையுள்
    ஆயாஉனக் காளாயினி
    அல்லேன்எனல் ஆமே.

    விளக்கம் :

    மூங்கில்கள் நிறைந்து வரும் பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின் கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் தலைவனே, நாய் போலும் கீழ்மையுடையேனாகிய யான் உன்னை எனது இளைய நாள்கள் பலவற்றினும் மனத்தால் நினைத்தல் இன்றிப் பேய்போல அலைந்து இளைத்தேன், ஆயினும்,  பெறுதற்கு அரிய உனது திருவருளை நான் பெற்றேன். இப்பேற்றை எனக்கு அளிக்க வந்த உனக்கு, முன்பே நான் அடியவனாகி, இப்பொழுது, “அடியவன் அல்லேன்” என எதிர் வழக்குப் பேசியது பொருந்துமோ.

    பாடல் 3:

    மன்னேமற வாதேநினைக்
    கின்றேன்மனத் துன்னைப்
    பொன்னேமணி தானேவயி
    ரம்மேபொரு துந்தி
    மின்னார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
    நல்லூர் அருட்டுறையுள்
    அன்னேஉனக் காளாயினி
    அல்லேன்எனல் ஆமே.

    விளக்கம் :

    தலைவனே, கரையை மோதி, பொன்னும் மணியும், வயிரமும் ஆகிய இவற்றைத் தள்ளிக்கொண்டு, ஒளிமிகுந்து வருகின்ற பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின் கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின் கண் எழுந்தருளியுள்ள தாய் போன்றவனே, உனக்கு நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது, “அடியவன் அல்லேன்” என்று எதிர் வழக்குப் பேசியது பொருந்துமோ! இனிமேல், உன்னை என் மனத்தில் ஒருபோதும் மறவாமலே நினைப்பேன்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....