Sunday, March 24, 2024
மேலும்
    Homeசெய்திகள்யானை லட்சுமி தங்கியி்ருந்த இடத்தில் திடீர் கால் தடம் தென்பட்டதால் பரபரப்பு...

    யானை லட்சுமி தங்கியி்ருந்த இடத்தில் திடீர் கால் தடம் தென்பட்டதால் பரபரப்பு…

    புதுச்சேரியில் இறந்த மணக்குள விநாயக கோவில் யானை லட்சுமி தங்கியி்ருந்த இடத்தில் 16-ம் நாள் காரியத்தின் போது யானையின் கால் தடம் தென்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் யானை கடந்த 30-ம் தேதி காலை நடைபயிற்சிக்கு சென்றபோது சாலையில் மயங்கி விழுந்து உயிரிழந்தது. யானை இறந்த செய்தியை கேட்டதும், புதுச்சேரி மக்கள் அனைவரும் அங்கு திரண்டு கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இதனையடுத்து, அங்கிருந்து யானையின் உடல் மணக்குள விநாயகர் கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டு, அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

    பின்னர் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ஸ்ரீ காளத்தீசுவரர் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான ஜேவிஎஸ் நகரில் புதைக்கப்பட்டது. இதனையடுத்து யானை உயிரிழந்த இடத்தில் சிலை வைத்து விளக்கு ஏற்றி, மக்கள் வழிபட்டு வந்தனர். இதேபோல் யானை புதைக்கப்பட்ட இடத்திலும் தினமும் மக்கள் வழிபட்டு சென்றனர்.

    இந்நிலையில், யானை லட்சமி இறந்து 16 நாட்கள் ஆகிறது. இதனால் கோவில் நிர்வாகம் சார்பில் ஈஸ்வரன் கோவில் பின்புறம் யானை லட்சுமி தங்கியிருந்த இடத்தில் 16 வது நாள் காரியங்கள் நடைபெற்றன. இதில் கோவில் நிர்வாகத்தினர், யானை பாகன் மற்றும் குறிப்பிட்ட சிலர் மட்டுமே பங்கேற்றுள்ளனர். இதனிடையே நேற்று யானை லட்சுமி எப்போதும் நிற்கும் இடத்தில் யானையின் காலடி அச்சு திடீரென தோன்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    மேலும், யானை சாணத்தின் வாசனை அடித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், யானையின் காலடி தடம் தெரிந்த இடத்தில் மலர் வளையம் வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.

    லட்சுமி யானையின் கற்சிலை அகற்றம்., பொதுமக்கள் மீது தடியடி., காவல்துறையின் அத்துமீறலால் பரபரப்பான புதுச்சேரி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....