Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்நாய் கூண்டில் அடைபட்ட பெண்; 20 நாட்களுக்கு பின் தப்பியது எப்படி?

    நாய் கூண்டில் அடைபட்ட பெண்; 20 நாட்களுக்கு பின் தப்பியது எப்படி?

    பிலிப்பைன்ஸ் நாட்டில் சீனாவை சேர்ந்த இளம்பெண், தன் ஆண் நண்பர் முன்னிலையில் பணத்திற்காக கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    பிலிப்பைன்ஸ் பம்பாங்கா மாகாணத்தின் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஒரு இரவு நேர கேளிக்கை விடுதியில், அந்த இளம்பெண் தன் ஆண் நண்பருடன் சென்றுள்ளார். அதன்பின், அவர் வெளியே வந்தபோது ஒரு கும்பலால் கடத்தப்பட்டார். 

    இரண்டு சீன நாட்டவர்கள் மற்றும் ஒரு பிலிப்பைன்ஸ் நாட்டவர் கொண்ட ஒரு கும்பல் அந்தப் பெண்ணை வெள்ளை நிற டொயோட்டா காரில் கடத்தியதாக அவருடைய நண்பர் காவல்துறையிடம் உடனடியாக தகவல் கொடுத்தார். காவல்துறையினர் கடத்தப்பட்ட பெண்ணை தேடி வந்தனர். அந்தப் பெண் காணாமல் போனதைத் தொடர்ந்து, அவருடைய காதலனிடம் 2 லட்சம் டாலர்கள் தர வேண்டும் என மிரட்டல் வந்தது.

    மேலும், அவரது போனில் அடையாளம் தெரியாத நம்பரில் இருந்து காணொளி ஒன்றும் அனுப்பப்பட்டது. அதில் கடத்தப்பட்ட அவரது காதலி பேஸ்பால் மட்டையால் அடிக்கப்பட்டார்.

    இந்நிலையில், கடத்தப்பட்ட அந்த சீனப் பெண் தப்பிச் சென்றார். அவர் ஒரு கடையில் பொருட்களை வாங்கும்போது காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டார். 

    சீனாவின் ஷாங்காய் பகுதியை பூர்வீகமாக கொண்ட அந்தப் பெண், காவல்துறை அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது நடத்தப்பட்ட விசாரணையில், தான் 20 நாட்கள் நாய்க் கூண்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவித்தார். 

    இதன்பிறகு, அவர் அடைத்து வைக்கப்பட்டிருந்த வீட்டில் காவல்துறை சோதனை நடத்தியது. அப்போது அவரைக் கடத்தி வைத்திருந்ததாக கூறப்பட்டவர்கள் அங்கிருந்து தப்பினர். 

    இருப்பினும், அந்தப் பெண் அடைத்து வைக்கப்பட்டிருந்த இடத்தில் சில தலையணைகளும் சிவப்பு வாளி அடங்கிய நாய்க் கூண்டும்  கண்டுபிடிக்கப்பட்டது. 

    கடத்தப்பட்ட பெண்  நாய்க் கூண்டிலிருந்து எப்படி தப்பினார் என்பது முழுமையாக தெரியவில்லை. இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதையும் படிங்க:  142-ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட அதிசய பாம்பு; மீண்டும் வந்தது எப்படி?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....