Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியா142-ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட அதிசய பாம்பு; மீண்டும் வந்தது எப்படி?

    142-ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட அதிசய பாம்பு; மீண்டும் வந்தது எப்படி?

    கேரளாவில் 142 ஆண்டுகளுக்கு பிறகு அரிய வகை பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

    கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் சுல்தான்பத்தேரி என்ற பகுதியில் செம்பராமலை என்று மலைப்பகுதி காணப்படுகிறது. இந்த மலைப்பகுதி கடல் மட்டத்திலிருந்து 1,400 அடி உயரத்தில் உள்ளது. 

    சில தினங்களுக்கு முன்பு அந்தப் பகுதியில் தொழிலாளர்கள் சில பேர் வழக்கம் போல் வேலைப் பார்த்து கொண்டிருந்தனர். அப்போது வேலை காரணமாக அப்பகுதியில் உள்ள மண்ணை தோண்டிக் கொண்டிருந்தனர்.

    அந்த சமயத்தில், மண்ணுக்குள் இருந்தது பாம்பு ஒன்று வெளியே வந்தது. இந்தப் பாம்பு பார்ப்பதற்கு மிகவும் வித்தியாசமாக இருந்ததால், அந்தப் பாம்பு குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் பாம்பைக் கண்டனர். பிறகு ஆராய்ச்சியாளர்களின் பார்வையில், இந்தப் பாம்பு தங்க கவச வாலன் என்ற அரிய வகையைச் சேர்ந்தது என கண்டுபிடிக்கப்பட்டது. 

    இந்தப் தங்க கவச வாலன் பாம்பு சுமார் 142 ஆண்டுகளுக்கு பிறகு, மண்ணில் இருந்து வெளியே வந்துள்ளது. 

    இந்தப் பாம்பு வகையை முதன் முதலாக 1880 ஆம் ஆண்டில் கர்னல் ரிச்சர்ட் ஹென்ரி என்பவர் கண்டறிந்தார். 

    இதையும் படிங்க: அஜித்குமார் புகைப்படங்களால் குஷியான ரசிகர்கள்…..ஒருவேளை இருக்குமோ?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....