Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுதிருவல்லிக்கேணி திருவேட்டீஸ்வரர்கோயிலுக்கு சொந்தமான சொத்து மீட்பு!

    திருவல்லிக்கேணி திருவேட்டீஸ்வரர்கோயிலுக்கு சொந்தமான சொத்து மீட்பு!

    சென்னை: திருவல்லிக்கேணியில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருவேட்டீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான சொத்து மீட்கப்பட்டது. 

    தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்குச் சொந்தமான சொத்துகளை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கும் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன. 

    அதன்படி, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள திருவேட்டீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான போரூர் கெருகம்பாக்கத்தில் உள்ள 15 கிரவுண்ட் மனை ஆக்கிரமிக்கப்பட்டதாக தகவல் வந்தது. 

    இதையடுத்து அந்த நிலம் மீட்கப்பட்டது. இந்த இடத்தின் சந்தை மதிப்பு ரூ.20 கோடியாகும். தற்போது இந்த சொத்து கோயில் வசம் பெறப்பட்டுள்ளது. இந்த சொத்தை குத்தகைக்கு வழங்கிடும் விதமாக பொது ஏலம் விடப்பட்டு, அதன்மூலம் கிடைக்கும் வருவாயை கோயிலின் மேம்பாட்டுக்கு பணிகளுக்கு செலவிடப்படும். 

    கோயில் சொத்து மீட்பு நடவடிக்கையில் இந்து சமய அறநிலையத்துறை சென்னை மண்டல உதவி ஆணையர் எம்.பாஸ்கரன், வட்டாட்சியர் (ஆலய நிர்வாகம்) காளியப்பன் மற்றும் கோயில் அலுவலர்கள் ஈடுபட்டனர்.

    இதையும் படிங்க: அஜித்குமார் புகைப்படங்களால் குஷியான ரசிகர்கள்…..ஒருவேளை இருக்குமோ?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....