Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுகெத்து காட்டிய பந்துவீச்சாளர்கள்...ஆசியக்கோப்பையை தூக்கிய இந்தியா!

    கெத்து காட்டிய பந்துவீச்சாளர்கள்…ஆசியக்கோப்பையை தூக்கிய இந்தியா!

    மகளிர் ஆசியக் கோப்பைப் போட்டியின் இறுதிப்போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி இலங்கை அணி வெற்றி வாகை சூடியுள்ளது.

    இருபது ஓவர் மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தில் நடந்துவருகிறது. இந்த ஆசிய கோப்பை தொடரில் இந்திய மகளிர் அணி அபாரமாக விளையாடி வெற்றிகளை குவித்தது. 

    அரையிறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தாய்லாந்து அணிகள் மோதின. இதில் தாய்லாந்து அணியை 74 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. இதைத்தொடர்ந்து, இலங்கை மற்றும் இந்திய அணிகள் இறுதிப்போட்டியில் மோதுவது உறுதியானது. 

    இந்நிலையில், இன்று 2022 மகளிர் ஆசியக் கோப்பை இருபது ஓவர் போட்டியின் இறுதிச்சுற்றில் இந்தியாவும் இலங்கையும் மோதின. சில்ஹெட்டில் நடைபெற்ற இறுதிச்சுற்றில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. 

    இதையடுத்து, இந்திய அணி பந்துவீச ஆரம்பித்தது. 3-வது ஓவரில் இலங்கை அணி கேப்டன் சமரி அத்தபத்து 6 ரன்களில் ரன் அவுட் ஆனார். இதன்பிறகு அந்த அணியின் விக்கெட்டுகள் வரிசையாக விழுந்தன. குறிப்பாக, பவர்பிளேவின் முடிவில் மட்டுமே 5 விக்கெட் இழப்புக்கு 16 ரன்கள் எடுத்துத் தடுமாறியது இலங்கை அணி. 

    இருப்பினும், இலங்கை அணித்தரப்பில் விக்கெட்டுகள் சரிவது நிற்கவில்லை. மொத்தத்தில் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு இலங்கை அணி 65 ரன்கள் எடுத்தது. இந்திய அணித்தரப்பில் ரேணுகா சிங் 3 விக்கெட்டுகளும் ராஜேஸ்வரி, ஸ்னேக் ராணா தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள். இதையடுத்து 66 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. 

    ஷபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா இணை தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கியது. ஆனால், 5 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஷபாலி தனது விக்கெட்டை இழந்து அதிர்ச்சி தந்தார். அடுத்து வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் 2 ரன்களுக்கு வெளியேறி மேலும் அதிர்ச்சி அளித்தார். 

    ஆனால், மறுபுறம் நிலையாகவும் அதிரடியாகவும் ஆடிய ஸ்மிருதி மந்தனாவுடன் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரித் கவூர் ஜோடி சேர்ந்து 8.3 ஓவர்களின் முடிவில் 71 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஸ்மிருதி மந்தனா

    25 பந்துகளுக்கு 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதன் மூலம் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை அணியை வீழ்த்தி 2022-ம் ஆண்டிற்கான மகளிர் ஆசியக் கோப்பையை வென்றுள்ளது.  3 விக்கெட்டுகளை வீழ்த்திய ரேனுகா சிங்கிற்கு ஆட்டநாயகி விருதும், தீப்தி சர்மாவுக்கு தொடர் நாயகி விருதும் வழங்கப்பட்டது. 

    இதையும் படிங்க: ‘துணிவு’ ரசிகர்களின் இந்த எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றுமா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....