'துணிவு'  ரசிகர்களின் இந்த எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றுமா?

நடிகர் அஜித்குமார் தற்போது  எச்.வினோத் இயக்கத்தில் 'துணிவு' திரைப்படத்தில் நடித்து வருகிறார்

படப்பிடிப்புகள் இல்லாத நாளில் அவ்வபோது நடிகர் அஜித்குமார்   பைக்-ரைடுகளில் ஈடுபடுவது பலரும் அறிந்ததே.

இந்நிலையில், பைக்-ரைடின் போது அஜித்குமார் செய்த சகாசங்களின் புகைப்படங்கள் தற்போது டிரெண்ட் ஆகி வருகிறது.

இந்த புகைப்படங்களை அஜித்குமார் ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

இதற்கு முன் வெளிவந்த வலிமை திரைப்படத்தில் அட்டகாசமான பைக்-ஸ்டண்ட் காட்சிகளில் நடித்து அஜித்குமார் அசத்தியிருப்பார்.

அதுபோல, பொங்கலுக்கு வெளியாகவுள்ள துணிவு திரைப்படத்தில்  பைக்-ஸ்டண்டுகள் இருக்குமா என ரசிகர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்

இதனால், துணிவு திரைப்படத்தின் அப்டேட்டுகள் குறித்து அறிய ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.