Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுதொடர் சரிவில் மேட்டூர் அணையின் நீர்வரத்து..

    தொடர் சரிவில் மேட்டூர் அணையின் நீர்வரத்து..

    மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 3,483 கன அடியிலிருந்து 3,123 கன அடியாக குறைந்துள்ளது. 

    தமிழகத்தின் முக்கிய அணைகளில் முதன்மையாக பார்க்கப்படும் அணை மேட்டூர் அணை. இந்த அணையானது காவிரி ஆற்றுப்படுகையின் மேல் கட்டப்பட்டுள்ளது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தினாலும், கர்நாடகா அணை திறக்கப்படாத காரணத்தினாலும் மேட்டூர் அணையின் நீர்வரத்து குறைந்துள்ளது.  

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்றைய கணக்குப்படி 117.48 அடியாக இருந்தது. ஆனால் இன்றைய நிலவரப்படி 117.06 அடியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 3,483 கன அடியிலிருந்து 3,123 கன அடியாக குறைந்துள்ளதும், அணைக்கு வரும் நீரின் அளைவை விட காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமென்பதாலும் நீர்மட்டம் சரிந்துள்ளது. 

    இந்நிலையில், தற்போது மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 3,123 கன அடியாக சரிந்துள்ளது. இதனால், அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 10,000 கன அடி நீரும், கிழக்கு- மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.

    மேலும், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117 அடியில் உள்ளது. தற்போதைய நிலவரப்படி, அணையின் நீர் இருப்பு 88.85 டி.எம்.சியாக உள்ளது. 

    வாரிசும் துணிவும் நேருக்கு நேர் மோதல்; வெல்லப் போவது யார்?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....