Monday, March 18, 2024
மேலும்
    Homeஅறிவியல்இந்த ஆண்டு 4 கிரகணங்கள்; இதில் இந்தியாவில் பார்க்கக்கூடியவை எத்தனை?

    இந்த ஆண்டு 4 கிரகணங்கள்; இதில் இந்தியாவில் பார்க்கக்கூடியவை எத்தனை?

    முழு சூரிய கிரகணம் உள்பட 4 கிரகண நிகழ்வுகள் இந்த ஆண்டு நடைபெற உள்ளன. 

    இந்த ஆண்டு நிகழவிருக்கும் கிரகணங்கள் குறித்து மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனில் உள்ள அரசு ஜிவாஜி வானியல் ஆய்வகத்தின் கண்காணிப்பாளர் ராஜேந்திர பிரகாஷ் குப்த் தெரிவித்துள்ளார். 

    இந்த ஆண்டு இரண்டு சூரிய கிரகணமும் இரண்டு சந்திர கிரகணமும் நடைபெற இருப்பதாக தெரிவித்த ராஜேந்திர பிரகாஷ் குப்தா, இதில் 2 கிரகண நிகழ்வுகளை மட்டுமே இந்தியாவில் காண முடியும் என தெரிவித்துள்ளார். 

    அதன்படி, வருகிற ஏப்ரல் மாதம் 20-ஆம் தேதி முழு சூரிய கிரகணம் தோன்றும் என்றும் இதனை இந்தியாவில் காண முடியாது என்றும் கூறியுள்ளார். 

    இதையடுத்து, இந்த ஆண்டு மே மாதம் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் இரவு நேரத்தில் சந்திர கிரகண நிகழ்வு நடைபெறும் என்றும், இந்த நிகழ்வை இந்தியாவில் காண முடியும் என்றும் ராஜேந்திர பிரகாஷ் குப்தா தெரிவித்துள்ளார். 

    தொடர்ந்து அக்டோபர் மாதம் 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் வளைய சூரிய கிரகண நிகழ்வு நடைபெறும். இந்தச் சமயம் இந்தியாவில் இரவு என்பதால் அந்த நிகழ்வை காண முடியாது. இதே அக்டோபர் மாதத்தில் 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் நிகழும் பகுதியளவு சந்திர கிரகணத்தை இந்தியாவில் காண முடியும் என ராஜேந்திர பிரகாஷ் குப்தா தெரிவித்துள்ளார். 

    சிதம்பரம் நடராஜர் கோயிலில் ‘சிவா சிவா’ முழக்கத்துடன் தேரோட்ட கொண்டாட்டம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....