Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்மேலும், 18,000 ஊழியர்கள் நீக்கம் - அமேசான் எடுத்த அதிரடி முடிவு

    மேலும், 18,000 ஊழியர்கள் நீக்கம் – அமேசான் எடுத்த அதிரடி முடிவு

    அமேசான் நிறுவனத்தில் இருந்து 18-ஆயிரம் பேர் பணி நீக்கம் செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

    ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிகழ்வானது கடந்த மூன்று மாதங்களில் அதிகளவில் நடைபெற்று வருகிறது. ட்விட்டர் 2.ஓ திட்டத்தை முன்னிட்டு அந்நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் 4000-க்கும் அதிகமான ட்விட்டர் ஊழியர்களை நீக்கியதாக தகவல்கள் வந்தன.

    ட்விட்டரைத் தொடர்ந்து, மெட்டாவின் வருவாய் எதிர்பார்த்ததை விட மிகவும் குறைந்துள்ளதால், 11,000- க்கும் மேற்பட்ட பணியாளர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக மெட்டா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. 

    இதைத்தொடர்ந்து, அமேசான் நிறுவனமும் ஊழியர்கள் பணிநீக்கத்தை தொடங்கியுள்ளதாக தகவல் வெளிவந்தது. அதன்படி, சுமார் 10 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

    இந்நிலையில், மேலும், 18 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அமேசான் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அமேசான் ஊழியர்களுக்கு அமேசான் தலைமை செயல் அதிகாரியிடம் இருந்து மெயில் வந்ததாகவும், அந்த மெயிலில் கடினமான பொருளாதார சூழலை எதிர்கொள்வது மிகவும் கடினமாக உள்ளது. ஆதலால், மேலும் 18 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

    இந்த பணிநீக்கமானது, விநியோக மைய நிர்வாகிகள், தொழில்நுட்ப ஊழியர்கள் போன்றவர்களிடத்தில் செயல்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமேசானில் 1.6 மில்லியன் ஊழியர்கள் பணிபுரிகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

    வாரிசும் துணிவும் நேருக்கு நேர் மோதல்; வெல்லப் போவது யார்?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....