Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்துபாய் மக்களால் ஒட்டகத்தின் ராணி என்று அழைக்கப்படும் பெண்மணி... கௌரவித்த அரசு

    துபாய் மக்களால் ஒட்டகத்தின் ராணி என்று அழைக்கப்படும் பெண்மணி… கௌரவித்த அரசு

    ‘துபாய்ல ஒட்டகந்தானே மேய்ச்சினு இருந்த’ என்ற சொல்லாடலை அரபிக் நாடுகளுக்கு வேலைக்கு சென்று வந்தவர்களை பார்த்து நகைச்சுவையாக வீசுவதென்பது இன்றளவும் நடந்து வரும் ஒன்றுதான். ஓட்டகம் மேய்ப்பதில் எந்த தவறும் இல்லை என்பது ஒரு புறம் ஆணித்தனமாக இருக்கட்டும். தற்போது, ஜெர்மனியை சேர்ந்த பெண் ஒருவர் எனக்கு எங்கும் கிட்டாத சந்தோசம் துபாயில் ஓட்டகம் வளர்ப்பதில் கிடைக்கிறது என்கிறார். அந்த பெண்ணின் பெயர், உஸ்ச்சி. 

    இருபத்தொரு வருடங்களுக்கு முன்பு அவர் ஜெர்மனியில் இருந்தபோது ஐந்து முதல் ஒன்பது ஓட்டகங்கள் வரை வளர்த்தார். இப்போது, இருபத்தொரு வருடங்களுக்குப் பிறகு துபாயில் பாலைவனத்தின் நடுப்பகுதியில் ஒட்டக பண்ணை ஒன்றையே அமைத்திருக்கிறார். 

    பண்ணைக்கு அருகிலேயே தங்க குடியிருப்பு ஒன்றையும் தயார் செய்த உஸ்ச்சி, தற்போது முப்பதிற்கும் மேலான ஒட்டகங்களை தன் பண்ணையில் வளர்த்து வருகிறார். மேலும், இது அவருக்கு எங்கும் கொடுக்காத மன நிறைவை தருவதாகவும், இன்னமும் ஒட்டகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க போவதாகவும் அவர் கூறுகிறார். 

    ராணி

    உஸ்ச்சி பண்ணையை, அவர் வளர்க்கும் ஒட்டகங்களை காண சுற்றுலாப் பயணிகள் தொடர்ந்து படையெடுத்த வண்ணம் உள்ளனர். அங்கு வருகிறவர்கள் உஸ்ச்சியை, கேமல் உஸ்ச்சி (camel uschi) என்றும், ஒட்டகங்களின் ராணி என்றும் அழைக்கின்றனர். சமீபத்தில் துபாய் அரசு உஸ்ச்சிக்கு கோல்டன் விசா வழங்கி கௌரவப்படுத்தியது. 

    இதையும் படிங்கஇப்படியும் ஒரு நபரா? கடைசி ஆசை படி விமான நிலையத்திலேயே உயிரை விட்ட உலகின் விசித்திர மனிதர்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....