Thursday, March 28, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்இப்படியும் ஒரு நபரா? கடைசி ஆசை படி விமான நிலையத்திலேயே உயிரை விட்ட உலகின் விசித்திர...

    இப்படியும் ஒரு நபரா? கடைசி ஆசை படி விமான நிலையத்திலேயே உயிரை விட்ட உலகின் விசித்திர மனிதர்

    இங்கிலாந்து, பாரிஸ் ஏர்போர்ட்டில் 18 ஆண்டுகாலமாக வசித்து வந்த ஈரானிய அகதி மாரைடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். 

    ஈரான் நாட்டின் தந்தைக்கும் இங்கிலாந்து நாட்டு தாய்க்கும் பிறந்தவர் மெஹ்ரான் கரிமி நாசேரி. இவர் கடந்த 1947 ஆம் ஆண்டு ஈரானை விட்டு வெளியேறி இங்கிலாந்துக்கு கல்வி கற்பதற்காக சென்றார். 

    இதையடுத்து அவரது படிப்பை முடித்துவிட்டு மீண்டும் ஈரான் திரும்புகையில் அந்நாடு அவரை ஏற்க மறுத்தது. இதன் காரணமாக அவர் மீண்டும் இங்கிலாந்துக்கு சென்றார். அதே சமயம் பாரிஸ் நகரில் சார்லஸ் டி கோல் விமான நிலையத்தில் தங்கியிருந்த அவருக்கு இங்கிலாந்து அரசு அந்நாட்டில் வாழ்வதற்கான குடியுரிமையை தர மறுத்தது. எந்தப்பக்கம் செல்வது என்று குழம்பிய நிலையில் அவர் அந்த விமானத்திலேயே தங்க ஆரம்பித்தார். 

    சுமார் 18 ஆண்டுகளாக அவர் அந்த விமானத்திலேயே தங்கியிருந்த நிலையில் திடீரென அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. பிறகு அவர் மாரடைப்பு காரணமாக உயிர் இழந்தார். மெஹ்ரான் கரிமி நாசேரி இறந்த பிறகு, அங்குள்ள விமான நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்களும் காவல்துறையினரும் இரங்கல் தெரிவித்து, அவருக்கான இறுதி சடங்குகளை எடுத்து நடத்தினர்.

    இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள், விமான நிலையத்தில் அவர் குறிப்பிட்ட பகுதியில் தங்கி வந்ததாகவும், அங்கு பணி புரியும் ஊழியர்களுடன் நல்ல நட்புடன் இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர். 

    மேலும் இவரின் வாழ்க்கையை மையமாக வைத்து பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஸ்பீல்பெர்க், ‘தி டெர்மினல்’ என்ற திரைப்படத்தை டாம் ஹாங்ஸ் நடிப்பில் இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....