Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்...

    முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்…

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று மாலை சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற உள்ளது.

    புதிய அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பு அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றம் பல்வேறு முக்கிய திட்டங்கள் மசோதாக்கள் தொடர்பாக ஆலோசனை நடத்த தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று மாலை கூட உள்ளது.

    சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மாலை 5 மணி அளவில் தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க .ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    தமிழக அமைச்சரவையில் புதிதாக கடந்த 14ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக பதவி ஏற்றார். மேலும் பல அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றம் செய்து அறிவிப்புகள் வெளியாகின. இந்த நிலையில் தமிழக அமைச்சரவை கூட உள்ளது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் கடந்த முறை சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளின் நிலை என்னவாக உள்ளது, இலாக்காக்கள் மாற்றம் தொடர்பாகவும், நிலுவையில் உள்ள மசோதாக்கள், ஆளுநரிடம் நிலுவையில் உள்ள சட்டப்பேரவை சட்ட தீர்மானங்கள், மற்றும் வரக்கூடிய 2023ம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் பொங்கல் விழாவிற்கு முன்னதாக வைக்கலாமா அல்லது பிறகு வைக்கலாமா அதில் என்னென்ன அறிவிப்புகள் வெளியிடலாம் என்பது குறித்து எல்லாம் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

    தமிழக காவல்துறையின் ‘கஞ்சா வேட்டை 3.0’ பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....