Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஉலகக் கோப்பை கால்பந்து; விறுவிறுப்பான ஆட்டத்தில் வெற்றி வாகை சூடிய அர்ஜென்டினா

    உலகக் கோப்பை கால்பந்து; விறுவிறுப்பான ஆட்டத்தில் வெற்றி வாகை சூடிய அர்ஜென்டினா

    உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணி வெற்றிப்பெற்று மகுடம் சூடியது. 

    கத்தாரில், நடந்து வந்த கால்பந்து உலகக் கோப்பை போட்டியானது நேற்றுடன் முடிவடைந்தது. இப்போட்டியின் ஆரம்பத்தில், தலா 4 அணிகள் கொண்ட 8 பிரிவுகள் என மொத்தம் 32 அணிகளுடன் கடந்த நவம்பர் 20-ஆம் தேதி தொடங்கி, டிசம்பர் 18-ஆம் தேதியான நேற்று முடிவடைந்தது. 

    நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியின் ஆரம்பத்திலிருந்தே இரு அணிகளும் திறம்பட விளையாடின. கோல் அடிக்க இரு அணிகளும் முயன்ற நிலையில், போட்டியின் 23-ஆவது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி கோலாக மாற்றினார் அர்ஜென்டினா கேப்டன் மெஸ்ஸி. 

    இதைத்தொடர்ந்து, ஆட்டத்தின் 36-ஆவது நிமிடத்தில் டி மரியா அருமையான கோலை அடிக்க முதல் பாதிலேயே அர்ஜென்டினா அணி 2-0 என்று முன்னிலை பெற்றது. பிரான்ஸ் வீரர்களின் முயற்சியை அர்ஜென்டினா வீரர்கள் சாமர்த்தியமாக தடுத்தனர். 

    ஏறத்தாழ, அர்ஜென்டினா வென்று விட்டது என்று கருதிய சூழலில்தான், பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் எம்பாப்வே 80-ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றி அசத்த, அடுத்த ஒரு நிமிடத்திலேயே அதாவது 81-ஆவது நிமிடத்தில் இன்னொரு அபாரமான கோலை அடித்து ஆட்டத்தை சமனில் நகர்த்தினார். 

    ஆட்டத்தின் இறுதியில் இரு அணிகளும் சமமான கோல்களை அடிக்க, அதையடுத்து 30 நிமிடங்கள் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. இந்த நேரத்தில், கூடுதலாக 30 நிமிடங்கள் வழங்கப்பட்ட நிலையில் 108-ஆவது நிமிடத்தில் மெஸ்ஸி கோலடித்தார். 118-ஆவது நிமிடத்தில் மீண்டும் பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றினார், பிரான்ஸ் அணியின் எம்பாப்வே.

    இதனால், ஆட்டமானது 3-3 என்ற கணக்கில் மீண்டும் சமனில் முடிந்தது. இதைத்தொடர்ந்து, கூடுதலாக மூன்று நிமிடங்கள் வழங்கப்பட, பெனால்டி சூட் முறை தொடங்கியது. பிரான்ஸ் தரப்பில் எம்பாப்பே கோல் அடிக்க, அர்ஜென்டினா தரப்பில் மெஸ்ஸி கோலடித்தார். 

    இதைத்தொடர்ந்து, பிரான்ஸ் அணி வீரர்கள் பெனால்டி சூட்டில் கோல்களை தவிரவிட, அர்ஜென்டினா அணியினர் அடுத்தடுத்த கோல்களை அடித்தனர். இறுதியில் பெனால்டி சூட்டில் 4-2 என்ற கணக்கில் அர்ஜென்டினா அணி வெற்றிப்பெற்றது. 

    பிரான்ஸ் தரப்பில் சிறப்பாக செயல்பட்டு இறுதிப்போட்டியில் 4 கோல்கள் அடித்த எம்பாப்பேவுக்கு தங்க காலணி பரிசாக வழங்கப்பட்டது. 

    ‘மரத்தின் வேராக மிஷ்கினின் அந்த பிசாசு இருக்கிறது’ – பிசாசு ஒரு பார்வை..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....