Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்தமிழக காவல்துறையின் 'கஞ்சா வேட்டை 3.0' பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு!

    தமிழக காவல்துறையின் ‘கஞ்சா வேட்டை 3.0’ பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு!

    சென்னை: தமிழகத்தில் இனி கஞ்சா இல்லை என்ற நிலையை கஞ்சா வேட்டை 3.0 உறுதி செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

    இது தொடர்பாக, பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், 

    தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களாக கஞ்சா வேட்டை 3.0 நடைபெற்றுவருவதாகவும், 403 கஞ்சா வணிகர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் காவல்துறை தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. 

    எதற்காக இந்த நடவடிக்கையோ, அந்த இலக்கை எட்ட உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். கஞ்சா விற்றதாக கைதாகி விடுதலையானவர்கள் மீண்டும் கஞ்சா விற்பது வாடிக்கையாகி விட்டது. இது தொடர்ந்தால் கஞ்சாவை ஒழிக்க முடியாது. 

    கஞ்சா விற்றதாக இரண்டாவது முறை கைதாவோருக்கு கடும் தண்டனையும், மூன்றாவது முறை கைதாவோரை குண்டர் சட்டத்திலும் சிறையில் அடைக்க வேண்டும். தமிழ்நாட்டில் இனி கஞ்சா இல்லை என்ற நிலையை கஞ்சா வேட்டை 3.0 உறுதி செய்ய வேண்டும். 

    கஞ்சா விற்பனை குறித்து காவல்துறைக்கு பொதுமக்கள் தகவல் அளிக்க வசதியாக மூன்று இலக்க இலவச தொலைபேசி அழைப்பு எண்ணை உருவாக்கி அறிவிக்க வேண்டும்.

    இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார். 

    நாடகம் ஆடும் ரங்கசாமியை நம்பி யாரும் ஏமாற வேண்டாம்! அதிமுக வையாபுரி மணிகண்டன்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....