Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழரின் பண்பாடு பாரம்பரியத்தை பாதுகாக்கவே ஜல்லிக்கட்டு! தமிழக அரசு விளக்கம்

    தமிழரின் பண்பாடு பாரம்பரியத்தை பாதுகாக்கவே ஜல்லிக்கட்டு! தமிழக அரசு விளக்கம்

    தமிழரின் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் பாதுகாக்கவே ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்து இருக்கிறது. 

    ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு எழுத்துப்பூர்வமான வாதங்களை உச்சநீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்து இருக்கிறது. 

    அதில் தமிழக அரசு, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு சட்டம் இயற்றி, பிறகு அதற்கு, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் காளைகளின் நல்வாழ்வை உறுதி செய்யும் வகையில் அனைத்து விதிமுறைகளும் பின்பற்றப்பட்டு தான் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதாகவும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. 

    மேலும் தமிழர்களின் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் பாதுகாக்கவே ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதாக தமிழக அரசு குறிப்பிட்டு கூறியுள்ளது. அதே சமயம், நாட்டு மாட்டு இனங்களை பாதுகாக்கவும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளது. 

    தமிழ்நாட்டின் கலாச்சாரத்தோடு ஜல்லிக்கட்டு இணைந்திருப்பதால் ஜல்லிக்கட்டுக்கு மிருகவதை சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருப்பதாகவும் எழுத்துப்பூர்வமாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்து இருக்கிறது.

    இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: ஆறு விக்கெட்டுகளை இழந்த வங்கதேசம்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....