Tuesday, March 19, 2024
மேலும்
    Homeஅறிவியல்உலகம் வியந்த டோலி எனும் க்ளோனிங் ஆடு உருவானது இப்படித்தான்!

    உலகம் வியந்த டோலி எனும் க்ளோனிங் ஆடு உருவானது இப்படித்தான்!

    முதன்முதலில் டோலி என்ற பெண் செம்மறி ஆடு, க்ளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட முதல் பாலூட்டி விலங்கு ஆகும். உலகில் மிகவும் பிரபலமடைந்த முதல் செம்மறியாடு.

    dolly

    டோலி வாழ்க்கை:

    இந்த செம்மறி ஆடு ஜூலை 5, 1996 ஆண்டில் பிறந்தது. ஆறரை ஆண்டுகள் வரை வாழ்ந்து பிப்ரவரி 14, 2003 ஆண்டில் இறந்தது. இந்த ஆட்டுக்கு பெற்றோர், மூவர் உள்ளனர். மரபணுக் கருக்கள் கொடுத்த இரு ஆடுகளும், தன் கருப்பையில் வளர்த்த மற்றொரு ஆடும் சேர்ந்து மூன்று பெற்றோர் ஆகின்றனர்.

    அமெரிக்காவில் உள்ள சிறந்த பாடகியான டோலி பார்டோன் பெயரையே இதற்கு சூட்டினர். இந்த, செம்மறி ஆடு 6 குட்டிகளை ஈன்றது. பிறகு, நுரையீரலில் ஏற்பட்ட நோய் தொற்று காரணமாக இறந்து போனது.

    டோலி எப்படி க்ளோனிங் செய்யப்பட்டது?

    மற்றொரு செம்மறி ஆட்டில் இருந்து பால் சுரப்பியில் பெறப்பட்ட மரபணுவை வைத்து இந்த ஆடு க்ளோனிங் செய்யப்பட்டது. மொத்தம் 277 குளோன் செய்யப்பட்ட கருக்களில் டோலி மட்டுமே உயிர் பிழைத்த செம்மறி ஆடு.

    cloning goat

    க்ளோனிங் மூலம் உருவாக்கப்பட்ட டோலியின் மரபணுவைப் பயன்படுத்தி, மேலும் நான்கு ஆடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. நாட்டிங்காம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அறிவியலாளர் கெய்த் கேம்பல், அதி தொழில்நுட்ப முறைகளைக்கொண்டு, இந்த நான்கு புதிய ஆடுகளை உருவாக்கியுள்ளார். இதற்கு ஒவ்வொறு ஆட்டிற்கும், தலா ஐந்து முட்டைகள் பயன்படுத்தப்பட்டது. சில ஆண்டுகளாக, இந்த தகவலை மறைத்ததால் சர்ச்சை எழுந்தனர்.

    பின்னர், ஜப்பான் ஆராய்ச்சியாளர் ஷின்யா யமானாகா அமைந்த குழுவிற்கு ஐ.பி.எஸ். செல்களை கண்டுபிடித்தமைக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது. அதற்க்கு, பின்னர் ஸ்டெம் செல் ஆராய்ச்சி தீவிரமானது. இந்த செல்கள் மனித நோயை மாதிரியாக்க வழியை உருவாக்கியது. ஐ.பி.எஸ். செல்களை வைத்து முதுமை, புற்றுநோய் மற்றும் இதய நோய் பற்றிய ஆராய்ச்சியில் பயன்படுத்தப்படுகின்றன.

    black footed ferret

    அழிவின் விளிம்பில் உள்ள விலங்குகளை குளோனிங் செய்வதிலும் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கருப்பு பாதம் கொண்ட ஃபெரெட்(black footed ferret) என்ற உயிரினத்தை ஆராய்ச்சியாளர்கள் வெற்றிகரமாக 2021ம் ஆண்டு க்ளோனிங் செய்தனர். அழிந்து போன வடக்கு வெள்ளை காண்டாமிருகங்கள், மம்மூத் வகை யானைகள் மற்றும் பெரிய பாண்டாக்களை மீட்டெடுக்கும் ஆய்வுகளில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....