Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்நட்சத்திரங்கள் வடிவில் கடற்கரை மணல்?

    நட்சத்திரங்கள் வடிவில் கடற்கரை மணல்?

    ஜப்பான் நாட்டில் கடற்கரையில் உள்ள  மணல் துகள்கள் நட்சத்திரங்கள் வடிவில் காட்சியளிக்கின்றன.

    விண்ணில் மின்னும் நட்சத்திரங்கள் எப்போதுமே வியப்புக்குரியவை. அதன்பின் இருக்கும் அறிவியல் ஆச்சரியத்துக்குரியவை. இன்றளவும், விண்ணில் இருப்பவைகள் பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணமே உள்ளன. ஒவ்வொருமுறை நட்சத்திரங்கள் குறித்த தகவல்கள் ஆராய்ச்சியாளர்களால் வெளியிடப்படும்போது, அத்தகவலை அறிந்துக்கொள்ள பலரும் ஆர்வமாக இருப்பர். 

    இப்படியாக, விண்ணில் உள்ள நட்சத்திரங்களை வியப்புடன் காணும் நமக்கு, மணல் துகள்களில் நட்சத்திர வடிவங்கள் தெரிவதும் ஆச்சரியத்துடனான வியப்புதான். 

    ஜப்பான் நாட்டில் உள்ள ஒகினாவா மாகாணத்தில் உள்ள சில கடற்கரை பகுதிகளில் உள்ள மணல் துகள்கள் நட்சத்திர வடிவில் காட்சியளிப்பதாக பல சுற்றுலாப்பயணிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் உண்மையில் அவை மணல் துகள்கள் அல்ல. நட்சத்திர வடிவில் காட்சியளிப்பதாக சொல்லப்படக்கூடிய மணல் துகள்கள், ஃபோராமினிஃபெரா எனப்படும் நுண்ணிய உயிரினங்களின் ஓடுகள். 

    இந்த ஃபோராமினிஃபெரா எனப்படும் நுண்ணிய உயிரினங்கள் கடலில் இறக்கும்போது அவற்றின் வெளிப்புற ஓடுகள் அலையால் கொண்டுவரப்பட்டு கடற்கரையை அடைகின்றன. பின்பு இந்த ஓடுகள் அங்குள்ள மணல் துகள்களோடு கலந்துவிடுகின்றது.

    இத்தாலி பிரதமரின் ராஜிநாமா கடிதம் நிராகரிப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....