Thursday, March 21, 2024
மேலும்
    Homeஆன்மிகம்சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்! 6 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து தரிசனம்

    சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்! 6 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து தரிசனம்

    சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்றும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. 

    சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை கடந்த 16 ஆம் தேதி திறக்கப்பட்டது. இதையடுத்து பல மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். 

    கடந்த நவம்பர் மாதம் 17 ஆம் தேதி பொதுமக்களுக்காக நடை திறக்கப்பட்ட நாள் முதல் 27 ஆம் தேதி வரை 11 நாட்களில் 6 லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம் செய்தனர். மேலும் கடந்த மாதம் 30 ஆம் தேதி வரை 8 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் சாமி தரிசனம் செய்ய ஆன்லைன் வாயிலாக முன்பதிவு செய்திருந்தனர். 

    சபரிமலைக்கு சராசரியாக 65 முதல் 70 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று 90 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். இன்று அதிகாலை 3 மணி அளவில் நடை திறந்தபோது பக்தர்களின் வரிசையானது 2 கிலோ மீட்டர் தூரம் வரை காணப்பட்டது. 

    அதன்படி, இன்று காலை 10 மணிக்குள்ளாகவே 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதன் காரணமாக பக்தர்கள் 6 மணி நேர்தத்திற்கும் மேலாக வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். வார இறுதி நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில், திங்கள்கிழமையிலும் பக்தர்களின் எண்ணிக்கை இன்று அதிகரித்து காணப்படுகிறது. 

    பரந்தூர் விமான நிலையம்; மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி டெண்டர் கோரியது தமிழக அரசு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....