Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுபரந்தூர் விமான நிலையம்; மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி டெண்டர் கோரியது தமிழக அரசு!

    பரந்தூர் விமான நிலையம்; மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி டெண்டர் கோரியது தமிழக அரசு!

    பரந்தூர் விமான நிலைய மேம்பாட்டிற்கான சர்வதேச ஒப்பந்தப்புள்ளியை தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம் கோரி இருக்கிறது. 

    சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய இருக்கிறது. இதற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. அதே சமயம் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விமான நிலையம் அமைக்கப்படுவதால், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும், விளைநிலங்கள் பாதிக்கப்படுவதாகவும் கவலை தெரிவித்து இன்னுமும் போராடி வருகின்றனர். 

    இருப்பினும், பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விளைநிலங்களும் வீடுகளும் அகற்றப்பட்டு வருகின்றன. 

    இதனிடையே, பரந்தூர் விமான நிலைய மேம்பாட்டிற்கான சர்வதேச ஒப்பந்தப்புள்ளியை தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம் கோரி இருக்கிறது. அதே சமயம், பசுமை விமான நிலையம்-சென்னை விமான நிலையம் இடையே சாலை, ரயில் இணைப்பு போக்குவரத்து தேவைகளையும் ஆராய வேண்டிய அவசியம் இருக்கிறது.

    மேலும் விமான போக்குரவத்தின் வளர்ச்சி நிலைகளை ஆய்வு செய்ய வேண்டும். 2069-70 ஆம் நிதியாண்டு வரை போக்குவரத்தின் கணிப்புகள் இடம்பெற வேண்டும் என்றும் தமிழக அரசு நிபந்தனை விதித்து இருக்கிறது.

    வெடித்து சிதறும் செமெரு எரிமலை! அச்சத்தில் இருப்பிடத்தைவிட்டு வெளியேறும் மக்கள்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....