Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்வெடித்து சிதறும் செமெரு எரிமலை! அச்சத்தில் இருப்பிடத்தைவிட்டு வெளியேறும் மக்கள்

    வெடித்து சிதறும் செமெரு எரிமலை! அச்சத்தில் இருப்பிடத்தைவிட்டு வெளியேறும் மக்கள்

    இந்தோனேசியா நாட்டின் செமெரு எரிமலை சீற்றம் காரணமாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பன இடங்களுக்கு இடம் பெயர்ந்து செல்கின்றனர். 

    நேற்று காலை முதல் எரிமலை சீற்றம் ஏற்பட்டு தற்போது வரை அதன் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் வசிக்கும் 2,400 கிராம மக்கள் தங்களின் இருப்பிடத்தைவிட்டு அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். 

    அதே சமயம் ராணுவத்தினரும் காவல்துறையினரும், பேரிடர் மீட்பு படையினரும் கிராம மக்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கிராம நிர்வாகிகள் மற்றும் பல துறையைச் சேர்ந்தவர்களும் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

    மேலும் அடுத்த இரண்டு வாரங்களுக்கு அப்பகுதியில் மாநில அவசரநிலை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் பொதுமக்களுக்கு தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. அவர்களுக்கு தங்குவதற்கான இடமும் முக்கியமாக மூன்று வேளை உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 

    பாதுகாப்பான இடத்திற்கு இடம்பெயர்ந்து செல்லும் கிராம மக்கள் தங்களுக்கு தேவையான சில அடிப்படை வசதியான பொருள்களை எடுத்து கொண்டு, வீடுகளை பூட்டிவிட்டு செல்கின்றனர். சிலர், விலை உயர்ந்த டிவி உள்ளிட்ட பொருட்களை எடுத்து செல்கின்றனர்.  

    இதனிடையே, சமூக வலைத்தளங்களில் எரிமலையின் சீற்றம் குறித்தான காணொளிகளும் புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன.

    விஜய் – லோகேஷ் இணையும் ‘தளபதி-67’ .. இன்று நடைபெற்ற அந்த கோலகலம்…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....