Monday, March 18, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்சென்னையில் சர்வதேச திரைப்பட விழா; 51 நாடுகள் பங்கேற்பு

    சென்னையில் சர்வதேச திரைப்பட விழா; 51 நாடுகள் பங்கேற்பு

    சென்னையில் நடைபெறவுள்ள சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட 12 தமிழ்த் திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 

    சென்னையில் ஆண்டுதோறும் சர்வதேச திரைப்பட விழா நடைபற்று வருகிறது. அந்த வகையில் இந்த வருடமும் சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் மாதம் 15-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 22-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 20-ஆவது முறையாக இந்த விழாவானது சென்னையில் நடைபெறுகிறது. 

    இத்திரைப்பட விழாவை தமிழக செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் வருகிற 15-ஆம் தேதி மாலை தொடங்கிவைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விழாவில் 51 நாடுகளைச் சார்ந்த 102 திரைப்படங்கள் திரையிடப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், சினிமா ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும், 20-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட 12 தமிழ்த் திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

    தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழ் படங்கள்; 

    ஆதார், பிகினிங், கார்கி, இரவின் நிழல், கசடதபற, பபூன், கோட், இறுதிபக்கம், மாமனிதன், நட்சத்திரம் நகர்கிறது, ஓ 2, யுத்த காண்டம்

    விஜய் – லோகேஷ் இணையும் ‘தளபதி-67’ .. இன்று நடைபெற்ற அந்த கோலாகலம்…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....