Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்'ஒழுக்கத்தை விட்டோம்..எல்லாம் நாசமா போயிடும்' - வெளிவந்த பகாசூரன் டிரெய்லர்..

    ‘ஒழுக்கத்தை விட்டோம்..எல்லாம் நாசமா போயிடும்’ – வெளிவந்த பகாசூரன் டிரெய்லர்..

    செல்வராகவன் நடிப்பில் உருவாகியுள்ள ‘பகாசூரன்’ திரைப்படத்தின் டிரெய்லர்  இன்று யூடியூப் தளத்தில் வெளிவந்துள்ளது. 

    ‘பழைய வண்ணாரப்பேட்டை’, ‘திரௌபதி’ மற்றும் ‘ருத்ர தாண்டவம்’ உள்ளிட்டப் படங்களை இயக்கிய மோகன்.ஜி தற்போது இயக்குநர் செல்வராகவனை வைத்து ‘பகாசூரன்’ என்கிற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

    நடிகர் நடராஜ், ராதாரவி, கே.ராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு சாம்.சிஎஸ் இசைமையத்துள்ளார். 

    கடந்த ஆகஸ்ட் மாதம் வெளிவந்த இத்திரைப்படத்தின் டீசர் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து, ‘பகாசூரன்’ திரைப்படத்தில் இருந்து ‘ சிவ சிவாயம்’ எனும் பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இப்பாடலும், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    இதைத்தொடர்ந்து, ‘பகாசூரன்’ திரைப்படம் வருகிற நவம்பர் மாதத்தில் வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்தனர். ஆனால் பல்வேறு காரணங்களால் திரைப்படம் வெளியாகாமல் தள்ளிப் போனது. 

    இந்நிலையில், ‘பகாசூரன்’ திரைப்படத்தின் டிரெய்லர்  இன்று யூடியூப் தளத்தில் வெளிவந்துள்ளது. மேலும், திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

     

    சென்னையில் சர்வதேச திரைப்பட விழா; 51 நாடுகள் பங்கேற்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....