Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுகோயில் சொத்துக்களை மீட்க ஒத்துழைக்காத அதிகாரிகளுக்கு சிறை... எச்சரிக்கை விடுத்த மதுரை கிளை

    கோயில் சொத்துக்களை மீட்க ஒத்துழைக்காத அதிகாரிகளுக்கு சிறை… எச்சரிக்கை விடுத்த மதுரை கிளை

    கோயில் சொத்துக்களை மீட்டெடுக்கும் நடவடிக்கைக்கு ஒத்துழைக்காத அதிகாரிகள் சிறைக்கு செல்ல நேரிடும் என உயர்நீதிமன்றம் மதுரை கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

    தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான 100 கோடி மதிப்பிலான சொத்துக்களை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. 

    இதனிடையே அந்த மனுவில், திருச்சி உஜ்ஜீவநாதர் கோயிலுக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குறிப்பிடப்பட்டிருந்தது. 

    இந்நிலையில், இன்று இந்த வழக்கை விசாரணை நடத்திய உயர்நீதிமன்றம் மதுரை கிளை, கோயில் சொத்துக்களை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்காத அதிகாரிகள் சிறைக்கு செல்ல நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.  

    தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான திருச்சி உஜ்ஜீவநாதர் கோயில் சொத்துக்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

    இதையும் படிங்கஎதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்யலாம் என மருத்துவ துறை திட்டமிட வேண்டும் – முதலமைச்சர் ஸ்டாலின்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....