Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்யலாம் என மருத்துவ துறை திட்டமிட வேண்டும் - முதலமைச்சர்...

    எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்யலாம் என மருத்துவ துறை திட்டமிட வேண்டும் – முதலமைச்சர் ஸ்டாலின்

    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை மருத்துவ துறை ஆராய வேண்டும் என மருத்துவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

    சென்னை, ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெறும் ‘சுகாதார மாநாடு – 2022’ யை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

    பின் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின்,

    கல்வி மருத்துவம் இந்த அரசின் இரு கண்கள் என்று நான் பலமுறை சொல்லி இருக்கிறேன். அதில் மக்கள் நல்வாழ்த்துறை மகத்தான துறையாக தற்போது செயல்பட்டு வருகிறது என்ற அவர், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்ட மற்றும் மாவட்ட தலைமை மருத்துவ மனைகள், அரசு தலைமை மருத்துவர் மனைகள் ஒருங்கிணைந்த முதல் மாநாடாக இந்த மாநாடு நடைபெறுகிறது இதனை தொடங்கி வைப்பது மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.

    தொடர்ந்து பேசிய அவர், மக்களை தேடி மருத்துவம் திட்டம், வருமன் காப்போம் திட்டம், சுப்புலட்சுமி மகளிர் உதவி திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் மருத்துவமனை மற்றும் மக்கள் நல்வாழ்த்துறையில் மக்களுக்காக செயல்பட்டு வருகிறது என்றார். அதில் குறிப்பாக மக்களை தேடி மருத்துவம் திட்டம், வருமுன் காப்போம் திட்டம், இன்னுயிர் காப்போம் திட்டம் இந்த மூன்று திட்டமும் இந்தியாவில் இதுவரையில எந்த மாநிலத்திலும் செயல்படாத திட்டங்கள் என்பதை பெருமையுடன் சொல்கிறேன் என தெரிவித்தார்.

    மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, சுகாதாரம் அகியவற்றில் தமிழகம் மேலும் மேலும் புகழ் அடைய வேண்டும் என்பது எனது விருப்பம் எனவும், எந்த மாநிலத்திலும் இல்லாத சாதனையை தமிழகம் செய்து வருகிறது என்ற அவர், தடுப்பூசியிலும் தமிழ்நாடு முன்னிலையில் இருக்கிறது. மேலும், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது.

    மருத்துவ வளர்ச்சி மேம்பாட்டிலும் தமிழகம் முதல் இடத்தில் இருக்க வேண்டும் அதற்கான திட்டம் போட வேண்டும். நோய்கள் புது புது அவதாரம் எடுத்து வருகிறது அதனை வெல்லும் அளவில் இருக்க வேண்டும் என்ற அவர், immunity

    குறைவே பல நோய்களுக்கு காரணமாக சொல்லப்படுகிறது. எனவே, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக அரசின் சார்பில் என்ன செய்யலாம் என்பது குறித்து திட்டமிட வேண்டும் என்றார்.

    மேலும், அரசு மருத்துவமனைக்கு தேவையான உட்கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டு வருகிறது. மருத்துவமனைகளின் செயல்பாடுகளை அவ்வப்போது தணிக்கை செய்ய வேண்டும்… தமிழக சுதாரத்துறை உயரிய நிலையை எட்ட வேண்டும் என்பதே விருப்பம் என தெரிவித்தார்.

    இதையும் படிங்கதமிழகம் முழுவதும் 3,808 நூலகங்களை புதுப்பிக்க ரூ.84 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடு..!

     

    அதற்கு முன்னதாக பேசிய Minister Ma. Subramanian

     

    கடந்த ஒன்றரை மாதத்தில் மட்டும் 47,092 காய்ச்சல் முகாம் நடைபெற்று உள்ளது. 74.62 லட்சம் பேர் நடமாடும் மருத்துவம் முகாம் மூலம் சிகிச்சை பெற்று இருக்கிறார்கள்.

    வருமுன் காப்போம் திட்டத்தின் மூலம் கடந்த ஆண்டு மட்டும் 1,260 இடங்களில் நடைபெற்று 9.40 லட்சம் பேர் பயன்பெற்று இருக்கிறார்கள். அதேபோல, இந்த ஆண்டு 966 மூகாம் நடைபெற்றுள்ளது.
    9.49 லட்சம் பேர் பயன்பெற்று இருக்கிறார்கள்.

    மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் 96,32,220 பேர் பயன்பெற்று இருப்பதாகவும், இன்னுயிர் காப்போம் திட்டத்தின் மூலம் 113 கோடி ரூபாய் செலவில் 1,26,933 பேர் பயன் பெற்று இருக்கிறார்கள். அடுத்த வாரம் விருதுநகரில் 7000 படுக்கை வசதியுடன் மருத்துவமனை தொடங்க உள்ளதாக கூறினார்.

    தொடர்ந்து பேசிய அவர், கொரொனா தடுப்பூசி 96% முதல் தவணையும், 92% இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தி உள்ளனர். இதனால் 4 மாதங்களாக கொரொனாவால் உயிரிழப்பு எதுவும் இல்லை என்ற அவர், ஓரிரு மருத்துவர்களின் கவனக்குறைவினால் சிறு அசம்பாவிதம் ஏற்பட்டு வருகிறது… அது போன்ற சம்பவம் நடைபெறாமல் சுகாதாரத்தை இனி பார்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

    தலைமை செயலாளர் மேடை பேச்சு

    விரிவாக ஆய்வு செய்யவும், எந்த மருத்துவமனை தங்களை மேம்படுத்திக்கொள்ளலாம் என்பது குறித்து ஆய்வு செய்ய முதல்முறையாக மாநாடு நடத்தப்படுவது மகிழ்ச்சி. அரசு மருத்துவமனைகள் தான் துணிச்சலுடன் கோவிட் பெருந்தொற்றை எதிர்கொண்டது.

    மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முதலிடம், உறுப்பு தானம் செய்வதில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது.தொற்று மற்றும் தொற்றா நோய் கட்டுப்படுத்துவதில், விபத்து மரணங்களை கட்டுபடுத்துவதில் இன்னும் மேம்பட வேண்டும் என்றார்.

    நமக்கு முன் இருக்கும் சவால்களை எதிர்க்கொண்டு மற்ற மாநிலங்களுக்கு மட்டுமல்ல மற்ற நாடுகளுக்கும் முன் மாதிரியாக இருக்க வேண்டும். மேலும், கோவிட் தொற்றுக்கு பிறகு எவ்வாறு அனைவரும் அரசு பள்ளிகளை நோக்கி வந்தார்களோ அதே போல் மக்கள் அரசு மருத்துவமனைகளை நோக்கி வரும் நிலையை கொண்டு வருவோம் என் தெரிவித்தார்.

    இதையும் படிங்கலிவர்பூல் கால்பந்து அணியை வாங்க திட்டமிடுகிறாரா முகேஷ் அம்பானி?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....