Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாலிவர்பூல் கால்பந்து அணியை வாங்க திட்டமிடுகிறாரா முகேஷ் அம்பானி?

    லிவர்பூல் கால்பந்து அணியை வாங்க திட்டமிடுகிறாரா முகேஷ் அம்பானி?

    ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, லிவர்பூல் கால்பந்து கிளப் அணியை வாங்க முயல்வதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

    உலகளவில் கால்பந்து விளையாட்டுக்கு இருப்பது போன்ற ரசிகர்கள் வேறு எந்த விளையாட்டிற்கும் கிடையாது என்பது பல முறை நிரூபனமாகியுள்ளது. கிளப் முறையில் கால்பந்து அணிகள் இயங்கும். அப்படியாக பல கிளப் இருக்க, லிவர்பூல் கால்பந்து கிளப் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இங்கிலாந்தில் பிறந்த லிவர்பூல் கால்பந்து அணி இங்கிலிஷ் பிரிமியர் லீக் உள்பட பல ஐரோப்பிய போட்டிகளில் அசத்தி வருகிறது. 

    பென்வே ஸ்போர்ட்ஸ் குரூப் (எப்எஸ்ஜி) தற்போது லிவர்பூல் கிளப் அணிக்கு உரிமையாளராக இருந்து வருகிறது. இந்நிலையில், லிவர்பூல் அணியை விற்கவுள்ளதாக எப்எஸ்ஜி முடிவெடுத்து அதற்கான பணியில் இறங்கியுள்ளது. 

    இந்நிலையில்தான், ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, லிவர்பூல் அணியை வாங்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. வெளிவந்துள்ள தகவலின்படி, முகேஷ் அம்பானிக்கு நெருக்கமான வட்டாரங்கள் லிவர்பூல் அணியின் விவரங்கள், விலை உள்ளிட்டவற்றை விசாரித்து முதல் கட்டப் பேச்சில் ஈடுபட்டுள்ளனர். 

    வெளிவந்த தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில், ரிலையன்ஸ் குழுமத்திற்கு அமெரிக்கா மற்றும் வளைகுடாநாடுகளைச் சேர்ந்த கோடீஸ்வரர்கள் சவாலாக விளங்குவர். அவர்களும் லிவர்பூல் அணியை வாங்க முன்னெடுப்புகளை நிகழ்த்தி வருகின்றனர். 

    பல்வேறு தகவல்கள் வெளிவந்துக் கொண்டிருக்கும் இச்சமயத்தில், “லிவர்பூல் அணி உரிமையாளர்களில் ஏராளமான மாற்றங்கள் வந்துவிட்டன, உரிமையாளர்கள் மாறப்போவது குறித்தும் தகவல்கள் வந்துள்ளன. லிவர்பூலில் பங்குகளை வாங்கும் மூன்றாம் தரப்பினர் விருப்பம் குறித்து எங்களுக்கு விண்ணப்பங்கள் வருகின்றன. சரியான நேரத்தில் நாங்கள் அது குறித்து பரிசீலிப்போம்” என எப்எஸ்ஜி நிறுவனம் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. 

    இதையும் படிங்கசீனாவில் தயாரிக்கப்படும் டெஸ்லா கார்..அமெரிக்காவிற்கு ஏற்றுமதியா? – எலான் மஸ்க் சொன்ன பதில்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....