Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஉணவகமாக மாறவுள்ள பிஸ்தா ஹவுஸ் விமானம் மேம்பாலத்தின் கீழ் சிக்கியது; மீட்பு பணி தீவிரம்!

    உணவகமாக மாறவுள்ள பிஸ்தா ஹவுஸ் விமானம் மேம்பாலத்தின் கீழ் சிக்கியது; மீட்பு பணி தீவிரம்!

    உணவகமாக மாறவுள்ள பிஸ்தா ஹவுஸ் நிறுவனத்தின் விமானம் பாபட்லா மாவட்ட மேம்பாலத்தின் கீழ் சிக்கியுள்ளது. 

    ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானம் ஒன்றின் பணிக்காலம் முடிந்தது. அப்படி பணிக்காலம் முடியும் விமானங்களை ஏலத்தில் விடப்படுவது வழக்கம். அப்படி ஒரு விமானத்தை பிஸ்தா ஹவுஸ் என்ற நிறுவனம் ஏலத்தில் எடுத்துள்ளது. மேலும் அதை அவர் உணவகமாக மாற்ற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

    இந்நிலையில், கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து இந்த விமானம் கண்டெய்னர் லாரி மூலமாக தெலுங்கானா மாநிலம் ஹைதிராபாத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. 

    சிறிது நாட்களுக்கு முன்பு இந்த விராமணத்தை கொள்வதில் பார்த்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்ப்பதோடு, அதை புகைப்படம் எடுத்து கொண்டனர். 

    செல்லும் வழியில் ஆச்சரியமாக பார்க்கப்படும் இந்த விமானம் தற்போது ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டம் மேதரமென்டலாவில் உள்ள ஒரு மேம்பாலத்தின் கீழ் சிக்கிக்கொண்டது. இதனை பார்த்த உள்ளூர் மக்கள் விமானத்தை கண்டு ரசித்தனர். புகைப்படமாகவும் காணொளிகளாகவும் பதிவு செய்து கொள்கின்றனர். 

    மேம்பாலத்தில் இருந்து அந்த விமானத்தை எந்தவித சேதமின்றி மீட்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில்  போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

    இதனிடையே வேறு வழி மூலமாக விமானம் ஹைதிராபாத் கொண்டு செல்லப்படும் என பிஸ்தா ஹவுஸ் நிறுவனம்
    அறிவித்துள்ளது. 

    இதையும் படிங்க: எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்யலாம் என மருத்துவ துறை திட்டமிட வேண்டும் – முதலமைச்சர் ஸ்டாலின்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....