Saturday, March 16, 2024
மேலும்
    Homeசமூக வலைதளம்மிரட்டிய சுட்டி சிங்கம்..பயந்த தாய் சிங்கம்..இணையவாசிகளை கவர்ந்து வரும் வீடியோ!

    மிரட்டிய சுட்டி சிங்கம்..பயந்த தாய் சிங்கம்..இணையவாசிகளை கவர்ந்து வரும் வீடியோ!

    சிங்க குட்டி ஒன்று தனது தாயை பின்னால் இருந்து மிரட்டிய வீடியோவை 18 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டு வருகின்றனர்

    தைரியத்திற்கு அதிக எடுத்துகாட்டாய் கூறப்படுவது சிங்கமே. அப்படியான சிங்கமே அச்சப்படும் வகையிலான வீடியோ ஒன்று இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. ஆம். அந்த வீடியோவில் பெண் சிங்கம் திரையில் படுத்து ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கிறது. இரண்டு சிங்க குட்டிகள் உள்ளன. 

    அவற்றுள் ஒரு சிங்க குட்டி, தாய் சிங்கத்தை நோக்கியவாறு முன்னேறுகிறது. ஆனால், பெண் சிங்கத்தின் பின்னால் இருந்த சிங்க குட்டி மெல்ல, பதுங்கியபடி முன்னேறி செல்கிறது. ஒரு கட்டத்தில் முன்னே இருந்த சிங்க குட்டி ஓடி தாயை நெருங்கும் சமயத்தில், பின்னால் இருந்த சிங்க குட்டி தாயின் மீது பாய்ந்து அதனை மிரட்ட முயற்சிக்கிறது. இந்தச் சூழலில் தாய் சிங்கம் பயத்தில் திடுக்கிடுகிறது. ஆனால், தன்னை பயமுறுத்தியது தன் பிள்ளைதான் என்றதும் அமைதியாக தன் இயல்பு நிலைக்கு சென்றுவிடுகிறது. 

    இந்த வீடியோவானது இதுவரையில் 18 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டு வருகின்றனர். இதில் உள்ள சுட்டி சிங்கத்தின் குறும்பும், தாய் சிங்கத்தின் பொறுமையும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

    இதையும் படிங்க: துர்கா பூஜையின் போது பயங்கரம்; பந்தலில் பரவிய தீயில் சிக்கி 5 பேர் பலி, 52 பேர் படுகாயம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....