Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாவானில் பறந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்...பாதுகாப்புக்குச் சென்ற ஜெட் விமானங்கள்

    வானில் பறந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்…பாதுகாப்புக்குச் சென்ற ஜெட் விமானங்கள்

    சீனாவுக்குச் சென்று கொண்டிருந்த ஈரான் பயணிகள் விமானம் இந்திய வான்வெளியில் பறந்து கொண்டிருந்தபோது வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்திய போர் ஜெட் விமானங்கள் பாதுகாப்புக்காகச் சென்றன. 

    இது குறித்து இந்திய விமானப் படை தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்திய வான்வெளியில் மகான் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்திய விமான நிலையங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து உடனடியாக, ஈரான் பயணிகள் விமானத்துக்கு பாதுகாப்பாக இந்திய ஜெட் விமானங்கள் பாதுகாப்பான இடைவெளியில் பறந்துச் சென்றன.

    மேலும், ஜெய்ப்பூர் மற்றும் சண்டிகர் விமான நிலையங்களில் அந்த விமானம் தரையிறங்கவும் அனுமதி வழங்கப்பட்டன. ஆனால், தனது பாதையை திருப்பிக் கொண்டு இந்த விமான நிலையங்களுக்கு வருவதற்கு விமானி மறுத்துவிட்டார்.

    இதையடுத்து, விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் பொய் என்பது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பயணிகள் விமானம் சீனாவுக்குப் பறக்க அனுமதிக்கப்பட்டது. 

    இதையும் படிங்க:தன் ஆய்வுப்பணியை அமைதியாக முடித்துக்கொண்ட மங்கள்யான் விண்கலம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....