Saturday, March 16, 2024
மேலும்
    Homeஅறிவியல்தன் ஆய்வுப்பணியை அமைதியாக முடித்துக்கொண்ட மங்கள்யான் விண்கலம்!

    தன் ஆய்வுப்பணியை அமைதியாக முடித்துக்கொண்ட மங்கள்யான் விண்கலம்!

    செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட பாதையில் ஆய்வு மேற்கொண்டு வந்த மங்கள்யான் விண்கலத்தில், எரிபொருள் மற்றும் பேட்டரி தீர்ந்ததை அடுத்து, அது தன் செயல்பாடுகளை நிறுத்திக்கொண்டதாகவும், அதனால் விண்கலத்தின் தொடர்பும் துண்டிக்கப்பட்டுவிட்டதாக இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, 450 ரூபாய் கோடி செலவில் கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் 5-ஆம் தேதி பி.எஸ்.எல்.வி-25 ராக்கெட் மூலம் மங்கள்யான் விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. அது 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24-ந் தேதி செவ்வாய் கிரக சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.

    செவ்வாய் கிரகத்தில் வெறும் ஆறு மாத காலப் பயணத்திற்காக வடிவமைக்கப்பட்ட இந்த மங்கள்யான் விண்கலம், கிட்டதட்ட எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பாட்டில் இருந்ததுள்ளது. குறிக்கப்பட்ட நாட்களை தாண்டியும், அறிவியல் பூர்வ தகவல்களை வழங்கி மிகச்சிறப்பான வகையில் தனது பங்களிப்பை கொடுத்த மங்கள்யான் விண்கலம் தற்போது பாதுகாப்பு வரம்பை மீறி தன் செயல்பாட்டை இழந்து கிரகங்களுக்கு இடையேயான தனது பயணத்தை முடித்துக்கொண்டதாக இஸ்ரோ அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க:மூன்றே நாட்களில் பொன்னியின் செல்வன் நிகழ்த்திய வசூல் சாதனை? வியந்து போன திரையுலகம்..

    மங்கள்யான் விண்கலம் குறித்து இஸ்ரோ அதிகாரிகள், செய்தி நிறுவனமான பிடிஐயிடம் கூறியதாவது :

    “இப்போது எரிபொருள் எதுவும் இல்லை. செயற்கைக்கோள் பேட்டரி தீர்ந்து விட்டது” அதன் இணைப்பும் துண்டிக்கப்பட்டுவிட்டது, மங்கள்யான் விண்கலத்தின் மூலம் தொழில்நுட்பம், வடிவமைப்பு போன்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த விண்கலத்தில் 15 கிலோ எடை கொண்ட 5 அறிவியல் ஆய்வு கருவிகள் பொருத்தி அனுப்பப்பட்டன என அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் மங்கள்யான் விண்கலத்தின் இணைப்பு எவ்வாறு துண்டிக்கப்பட்டது என்பது குறித்த எந்த விதமான அறிவிப்பும் தேசிய விண்வெளி நிறுவனத்திடமிருந்து அதிகாரப்பூர்வமாக வரவில்லை.

    “சமீபத்தில் ஏழரை மணி நேரம் நீடித்த கிரகணங்கள் உட்பட மீண்டும் மீண்டும் கிரகணங்கள் ஏற்பட்டன. செயற்கைக்கோள் பேட்டரி சுமார் ஒரு மணி நேரம் மற்றும் 40 நிமிடங்கள் மட்டுமே கிரகணத்தை கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், நீண்ட கிரகணம் பேட்டரிக்கு பாதகமாகியிருக்கலாம் ” என்று சில ஆதாரங்களை மேற்கோள் காட்டி PTI தெரிவித்துள்ளது.

    மங்கள்யான் அனுப்பப்பட்டதன் நோக்கம் :

    மங்கள்யான் 2013 இல் PSLV-C25 இல் இந்தியாவில் இருந்து முதல் கிரகங்களுக்கு இடையேயான பணியாக ஏவப்பட்டது. இதனால் பூமியின் சுற்றுப்பாதைக்கு அப்பால் இதுபோன்ற ஒரு பயணத்தை அனுப்பும் உலகின் நான்காவது விண்வெளி நிறுவனமாக இஸ்ரோ இருக்கும் . இந்த விண்கலமானது, இந்தியாவினால் வேறொரு உலகில் ஒரு பணியை வடிவமைக்கவும், ஏவவும் மற்றும் இயக்கவும் முடியும் என்பதை நிறுவுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு செயல்விளக்க பணியாகும்.

    இப்படி பல சிறப்புகளை கொண்ட மங்கள்யான் தற்போது அதன் பணியை முடித்துக்கொண்டாலும், வரும் ஆண்டுகளில் செவ்வாய் கிரகத்திற்கு மற்றொரு பயணத்தைத் தொடங்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இது ஒரு ஆர்பிட்டராகவும் இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

    இதுகுறித்து, முன்னாள் இஸ்ரோ தலைவர் கே சிவன், 2021 ம் ஆண்டு பதவிக் காலத்தின்போதே இந்தியாவில் வரவிருக்கும் சந்திரன் பணியான சந்திரயான் -3 ஏவப்பட்ட பின்னரே மங்கள்யான் -2 மேற்கொள்ளப்படும். இரண்டாவது செவ்வாய் பயணம் இன்னும் திட்டமிடல் நிலையிலேயே உள்ளது என்று கூறியிருந்தார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....