Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்கடல் சீற்றத்தால் படகு கவிழ்ந்து மாயமான மீனவர்! தேடுதல் பணி தீவிரம்

    கடல் சீற்றத்தால் படகு கவிழ்ந்து மாயமான மீனவர்! தேடுதல் பணி தீவிரம்

    புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றபோது கடல் சீற்றத்தால் படகு கவிழ்ந்து மீனவர் மாயமான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்த திருபட்டினம் பட்டினச்சேரி மீனவ கிரமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது30). இவர் தனக்கு சொந்தமான பைபர் படகில், சிவா (28) என்பவருடன் நேற்று அதிகாலை பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் இருந்து கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றார்.

    கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது கடல் சீற்றம் காரணமாக, பைபர் படகு திடீரென கடலில் கவிழ்ந்தது. இதில் பைபர் படகில் இருந்த 2 மீனவர்களும் கடலில் மூழ்கினர். அவர்களில் மீனவர் மணிகண்டன் கடலில் நீச்சலடித்து கரை திரும்பினார். ஆனால் சிவா என்ன ஆனார்? என்று தெரியவில்லை.

    தொடர்ந்து சக மீனவர்கள் கடலில் பல இடங்களில் தேடியும் சிவா கிடைக்காததால், இந்திய கடலோர காவல்படைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்திய கடலோர காவல்படையினர் மாயமான மீனவர் சிவாவை தீவிரமாக தேடிவருகின்றனர்.

    கடல் சீற்றத்தால் படகு கவிழ்ந்து மீனவர் மாயமான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த வார நாட்கள் உங்களுக்கு எப்படி இருக்கு? துலாம் முதல் மீனம் வரை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....