Saturday, March 23, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்லாலு பிரசாத் யாதவ் விரைவில் குணம்பெற அன்புமணி வாழ்த்து!

    லாலு பிரசாத் யாதவ் விரைவில் குணம்பெற அன்புமணி வாழ்த்து!

    சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட பீகார் முன்னாள் முதல்வர் சுறுசுறுப்பாக பொது வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

    பீகார் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் சிறுநீரக கோளாறால் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தார். இதைத்தொடர்ந்து, அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. லாலு பிரசாத்தின் மகளே தாமாக சிறுநீரக மாற்று அறுவை செய்ய முன்வந்தார். 

    இந்நிலையில், அவருக்கு சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் சீறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. மேலும் லாலு பிரசாத் யாதவிற்கு வெற்றிகரமாக சிறுநீரக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 

    அறுவை சிகிச்சை முடிந்து லாலா பிரசாத் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக, அவரது மகனும் பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். 

    இதனிடையே, லாலு பிரசாத் யாதவ் விரைவாக குணமடைய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “பீகார் முன்னாள் முதல்-மந்திரியும் , சமூக நீதி தலைவருமான லாலு பிரசாத அவர்கள் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் இருந்து விரைவாக குணமடையவும், சுறுசுறுப்பாக பொது வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் என வாழ்த்துகிறேன்” என தெரிவித்துள்ளார். 

    அதே சமயம் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “சிங்கப்பூர் மருத்துவமனையில் சிறுநீரக அறுவை மருத்துவம் செய்து கொண்டுள்ள எனது நண்பரும், இராஷ்ட்ரிய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத் அவர்கள் விரைவில் முழு நலம் பெற்று பொதுவாழ்விலும், சமூகநீதிக் களத்திலும் மீண்டும் தீவிரமாக செயல்பட வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார். 

    நானும் அவரும் ஒரே சமயத்தில் தான் முதலமைச்சர்கள் ஆனோம்; நினைவுகளை பகிர்ந்த ரங்கசாமி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....