Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்நானும் அவரும் ஒரே சமயத்தில் தான் முதலமைச்சர்கள் ஆனோம்; நினைவுகளை பகிர்ந்த ரங்கசாமி

    நானும் அவரும் ஒரே சமயத்தில் தான் முதலமைச்சர்கள் ஆனோம்; நினைவுகளை பகிர்ந்த ரங்கசாமி

    உலகத்திற்கே வழிகாட்டியவர் பிரதமர் மோடி என முதலமைச்சர் ரங்கசாமி புகழாரம் சூட்டியுள்ளர். மோடியை எதிர்த்து குஜராத்தில் பிரச்சாரம் செய்த போது என் முதுகில் மோடி தட்டி உற்சாகபடுத்தினார் எனவும் ரங்கசாமி பெருமிதம்.

    புதுச்சேரியில் மோடி @20 நனவாகும் கனவுகள் மற்றும் அம்பேத்கர் &மோடி என்ற இரு நூல்கள் வெளியீட்டு விழா புதுச்சேரி காமராஜர் மணிமண்டபத்தில் நடைபெற்றது. விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி, துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், சபாநாயகர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் மோடி @20 நனவாகும் கனவுகள் என்ற நூலினை ஆளுநர் தமிழிசை மற்றும் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் வெளியிட முதலமைச்சர் ரங்கசாமி பெற்றுக்கொண்டார். தொடர்ந்து அம்பேத்கர் &மோடி என்ற புத்தகத்தை முதலமைச்சர் வெளியிட ஆளுநர் தமிழிசை பெற்றுக்கொண்டார்.

    பின்னர் விழாவில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, மோடி @20 நனவாகும் கனவுகள், அம்பேத்கர் &மோடி ஆகிய இரண்டும் முக்கியமான நூல் என்றும், தமிழில் மொழியாக்கம் செய்து இங்கு வெளியிட்டுள்ளனர்.மோடி @20 நனவாகும் கனவுகள் என்ற நூலை துணைநிலை வழங்க நான் வாங்கியது பெருமை.

    அம்பேத்கர் & மோடி என்ற நூலை நான் வெளியிட்டது மகிழ்ச்சி என்று கூறிய அவர், 2001-ல் நான் புதுச்சேரியிலும், பிரதமர் மோடி குஜராத்திலும் ஓரே நேரத்தில் முதலமைச்சர் ஆனோம் என்றும், இது ஒரு பெருமை மற்றும் ஒற்றுமை. நானும் அவரும் பல முதலமைச்சர்கள் கூட்டங்களில் பங்கேற்று உள்ளோம் என்றும், கூட்டத்திற்கு எளிமையாக வரும் அவர், அவருடைய எண்ணம் மற்றும் கருத்தை தெளிவாக பேசுவார். மாநில வளர்ச்சிக்காக சரியாக பேசுவார்.

    அப்பொழுது அவர் கூறும் கருத்துகளை அப்போது இருந்த காங்கிரசார் நீங்கள் அமருங்கள் நீங்கள் இங்கே மேலே வந்து அமரும் போது கூறுங்கள் என கூறுவர்கள். தற்போது அவர் பிரதமாராக வந்துவிட்டார் என்று கூறிய ரங்கசாமி, காங்கிரஸ் கட்சியில் நான் முதல்வராக இருந்த போது குஜராத் தேர்தலில் தமிழர் வசிக்கும் பகுதியில் மோடிக்கு எதிராக பிரச்சாரம் செய்தேன் என்றும், அப்போது ஒருமுறை பிரமர் எனது முதுகில் தட்டி, “அது கட்சி பணி” என கூறி தன்னை உற்சாக படுத்தியதாக ரங்கசாமி நினைவு கூர்ந்தார்.

    தற்போது தனித்தன்மையோடு நாட்டின் வளர்ச்சியை மோடி கொண்டுவந்துள்ளார். ஜி20 தலைமை ஏற்கும் நாடாக ஆக்கப்பட்டுள்ளது. அதற்கு பிரதமரின் முயற்சி, அயராத கடின உழைப்பு தான் காரணம் என்றும், அது தான் நமது நாட்டின் தற்போதைய வளர்ச்சி என்றும், என் மீது பிரதமருக்கு தனி பிரியம் உள்ளது. உலகின் தலை சிறந்த தலைவராக தற்போது உள்ளார்.

    சிறந்த தலைவரை தேடும் நபராக மோடி உள்ளார். மாநில அந்தஸ்து வேண்டும் என கேட்டுள்ளேன். அது மட்டும் தான் குறையாக உள்ளது என்பேன். கொடுக்கிறேன் என்று கூறி வருகிறார். புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கான நிதியை மத்திய அரசு வழங்கி வருகிறது என பேசினார்.

    சிங்க பெண்ணாக வலம் வந்து பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திய ஜெ.ஜெயலலிதா..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....