Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்'முதல்வராக' ஸ்டாலினின் 'முதல்' ரயில் பயணம்; பொதிகை ரயிலில் தென்காசிக்கு செல்வது எதற்காக தெரியுமா?

    ‘முதல்வராக’ ஸ்டாலினின் ‘முதல்’ ரயில் பயணம்; பொதிகை ரயிலில் தென்காசிக்கு செல்வது எதற்காக தெரியுமா?

    தென்காசியில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை இரவு இரயில் மூலம் தென்காசிக்கு பயணம் மேற்கொள்கிறார்.

    முதலமைச்சராக பொறுப்பேற்ற பின், முதல் முறையாக ரயில் பயணம் மேற்கொள்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதன்முறையாக வரும் 8ம் தேதி தென்காசி செல்கிறார்.

    இதற்காக வரும் 7ம் தேதி இரவு சென்னையிலிருந்து பொதிகை ரயில் மூலம் தென்காசி பயணம் மேற்கொள்கிறார். சென்னை எழும்பூரில் இருந்து நாளை இரவு 8:40மணிக்கு புறப்படும் இரயில் 8ம் தேதி காலை 7.30மணிக்கு தென்காசி சென்றடையும்.

    பின்னர் முதலமைச்சர் குற்றாலத்தில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். தொடர்ந்து, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    1லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.

    தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் முறையாக தென்காசி மாவட்டத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதால் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    அதனை தொடர்ந்து, மதுரை செல்லும் முதலமைச்சர், இரவு மதுரையில் தங்குகிறார். பின்னர் 9ம் தேதி காலை மதுரையில் மாநகராட்சி வளைவை திறந்து வைக்கும் அவர், அம்பேத்கர் சிலையையும் திறந்துவைக்கிறார். அன்றைய தினமே விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.

    நானும் அவரும் ஒரே சமயத்தில் தான் முதலமைச்சர்கள் ஆனோம்; நினைவுகளை பகிர்ந்த ரங்கசாமி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....