Saturday, March 16, 2024
மேலும்
    Homeஜோதிடம்இந்த வார நாட்கள் உங்களுக்கு எப்படி இருக்கு? துலாம் முதல் மீனம் வரை

    இந்த வார நாட்கள் உங்களுக்கு எப்படி இருக்கு? துலாம் முதல் மீனம் வரை

    துலாம்: துலாம் ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு முயற்சியின் மூலம் வெற்றி காணக்கூடிய நல்ல நாட்களாக உள்ளன. கணவன்-மனைவி இடையே பிரச்சனைகள் தோன்றி மறையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். நண்பர்களின் நட்பு உங்களுக்கு மன மகிழ்வைத் தரும். அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலை நிலவும். தொழிலில் முயற்சியை கைவிடக் கூடாது. புதிய முயற்சிகளில் இறங்க வேண்டாம். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறக் கூடும். 

    விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு விடா முயற்சியின் மூலம் சாதித்து காட்டக் கூடிய நல்ல நாட்களாக இருக்கின்றன. பொறுமையுடன் இருப்பது உங்களின் திறமையை அதிகரிக்க கூடும். திருமண காரியங்கள் கைக்கூடி வரும். அலுவலகத்தில் வேலை அதிகமாக இருக்கும். தொழிலில் புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. கணவன்-மனைவி இடையே அன்பும் பாசமும் அதிகரிக்கும். பிள்ளைகளால் மனம் மகிழ்வீர்கள். செலவுகள் அதிகம் ஏற்பட்டாலும் அதை சமாளிக்க கூடிய திறமை உங்களிடம் இருக்கும். 

    தனுசு: தனுசு ராசிக்காரர்களே இந்த வார நாட்கள் உங்களுக்கு நன்மைகள் நடைபெறும் நல்ல நாட்களாக இருக்கின்றன. ஆன்மிக செயல்பாடுகளில் ஈடுபடுவதன் மூலம் மன நிம்மதி அடைவீர்கள். தேவையற்ற பேச்சுகளை தவிர்ப்பது நல்லது. நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். அலுவலகத்தில் எப்போதும் போல் நல்ல சூழ்நிலை நிலவும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் இருக்கும். செலவுகள் அதிகமானாலும் அதை சமாளித்துவிடுவீர்கள். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். 

    மகரம்: மகர ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு ஓரளவு நன்மைகள் நடைபெறும் நாட்களாக இருக்கின்றன.உற்சாகமாக செயல்படுவதன் மூலம் பிரச்சனைகளை எளிதாக சமாளிப்பீர்கள். சகோதர வழியில் தேவையற்ற பிரச்சனைகள் எழ வாய்ப்புண்டு. கணவன்-மனைவி இடையே அன்பு கூடும். அலுவலகத்தில் உற்சாகமான் சூழ்நிலை இருக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்படும். உங்களின் முயற்சிக்கு ஏற்ற வெற்றிகள் குவியும். 

    கும்பம்: கும்ப ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு நன்மையையும் தீமையும் கலந்து நடக்க கூடிய நாட்களாக காணப்படுகின்றன. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறக் கூடிய சூழல் உருவாகும். அலுவலக பணிகளில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. தொழிலில் புதிய முதலீடுகளை தவிர்க்க வேண்டும். முக்கிய முடிவுகளை எடுப்பதில் சற்று சிரமம் இருக்கலாம். பொருளாதாரம் போதுமானதாக இருக்கும். 

    மீனம்: மீன ராசிக்காரர்களே இந்த வார நாட்கள் உங்களுக்கு, நன்மைகள் நடைபெறும் மகிழ்ச்சியான நாட்களாக உள்ளன. பொருளாதார ரீதியில் எந்த பிரச்சனையும் இருக்காது. அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். புதிய வீடு வாங்க நல்ல நேரம். தொழிலில் ஆலோசித்து முடிவெடுப்பது நல்லது. பயணங்கள் சில ஆதாயங்களை ஏற்படுத்தி கொடுக்கும். குடும்ப தலைவிகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....