Wednesday, March 20, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்துணிவு அப்டேட்; டிசம்பர் 9-ஆம் தேதி அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் கொண்டாட்டம்...

    துணிவு அப்டேட்; டிசம்பர் 9-ஆம் தேதி அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் கொண்டாட்டம்…

    நடிகர் அஜித்குமாரின் துணிவு திரைப்படத்தின் முதல் பாடல் வருகிற டிசம்பர் 9-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    நடிகர் அஜித்குமார் நடிப்பில் ‘துணிவு’ திரைப்படம் மிக வேகமான முறையில் உருவாகி வருகிறது. பொங்கல் வெளியிடாக, துணிவு திரைப்படம் திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இத்திரைப்படம் சார்ந்த புரோமஷன் பணிகளை தற்போது தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

    ‘துணிவு’ திரைப்படம் சார்ந்து சமீபத்தில், இத்திரைப்படத்தின் இயக்குநர் எச்.வினோத் அளித்த போட்டி இணையத்தில் வைரலானது. இதைத்தொடர்ந்து, வெளிவந்த துணிவு திரைப்படத்தின் புகைப்படங்களும் வைரலானது. 

    தற்போது, டப்பிங் பணிகள் எல்லாம் முடிவடைந்து பொங்கலுக்கு திரைக்கு வர காத்திருக்கிறது, துணிவு திரைப்படம். இந்நிலையில், இத்திரைப்படம் சார்ந்த அப்டேட்டுகளை தொடரந்து கேட்ட வண்ணம் ரசிகர்கள் உள்ளனர். 

    ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் தரும் வகையிலும், அவர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும் வகையிலும் துணிவு படக்குழு ஒரு தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, ‘சில்லா சில்லா’ எனும் பாடல் துணிவு திரைப்படத்திலிருந்து வருகிற டிசம்பர் 9-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஜிப்ரான் இசையில் இப்பாடலை அனிரூத் பாட, வைசாக் பாடல் வரிகளை எழுதியுள்ளார். 

    ‘ப்ளு சட்டை மாறன்..’ விமர்சனத்தை அறிய ஆவலாக உள்ளேன் – பிரபல இயக்குநர் பதிவு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....