Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்106 வீரர்களுடன் நடுக்கடலில் மூழ்கிய போர் கப்பல்! தேடுதல் பணி தீவிரம்

    106 வீரர்களுடன் நடுக்கடலில் மூழ்கிய போர் கப்பல்! தேடுதல் பணி தீவிரம்

    தாய்லாந்து நாட்டிற்கு சொந்தமான போர் கப்பல் நேற்று நள்ளிரவு தீவிர புயல் காற்று வீசியதில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

    தாய்லாந்து நாட்டின் கடற்படைக்கு சொந்தமான எச்டிஎம்எஸ் சுகோதை (HTMS Sukhothai) என்ற போர் கப்பல் நேற்று நள்ளிரவு தாய்லாந்து வளைகுடா பகுதியில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. அந்தப் போர் கப்பலில் கடற்படை வீரர்கள் உள்பட 106 பேர் பயணம் செய்தனர். 

    அந்த சமயத்தில் திடீரென புயல் காற்று வீசியது. மேலும் கடலும் சீற்றத்துடன் காணப்பட்டது. இதன் காரணமாக போர் கப்பலில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதோடு கப்பலுக்குள் கடல் நீர் புகுந்தது.  மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் கடல்நீரை வெளியேற்ற முடியாமல் அனைவரும் தவித்தனர். 

    போர் கப்பலில் அதிக கடல்நீர் புகுந்ததால் மூழ்கத் தொடங்கியது. போர் கப்பலில் இருந்த வீரர்கள் உள்பட அனைவரும் கடலில் விழுந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த கடற்படையினர் மீட்புபணியில் ஈடுபட்டனர். இதில் 75 பேர் மீட்கப்பட்டனர். மேலும் 31 வீரர்கள் காணவில்லை என்பதால் அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    சமூகவலைதளத்தில் கிண்டல்..விளக்கமளித்த ‘துணிவு’ பட நடிகை..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....