Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் பழுதடைந்த வீடுகள் இடிக்கப்பட்டு, புதிய வீடுகள் கட்டி தரப்படும்; அமைச்சர்...

    தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் பழுதடைந்த வீடுகள் இடிக்கப்பட்டு, புதிய வீடுகள் கட்டி தரப்படும்; அமைச்சர் முத்துசாமி

    தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் சென்னை உட்பட தமிழகம் முழுவதிலும் 61 இடங்களில் உள்ள வாடகை குடியிருப்பு கட்டிடங்களை இடித்து விட்டு புதியதாக வாடகை அடுக்கு மாடி குடியிருப்பு வீடுகள் கட்டித் தரப்படும் என தமிழ்நாடு வீட்டு வசதி அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார் .

    சென்னை நந்தனம் மூப்பனார் மேம்பாலம் அருகே 96 செண்டில் நியூ டவர் என்ற பெயரில் புதியதாக 17 அடுக்குமாடிகள் கொண்ட 102 வீடுகள் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்டு வருகிறது.

    இந்த கட்டுமான பணிகளை தமிழக வீட்டு வசதி வாரியத் துறை அமைச்சர் முத்துசாமி அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முத்துசாமி நியூ டவர் என்ற பெயரில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புகள் கடாடுமாணப்பணிகள் 90 சதவிகிதம் முடிந்துள்ள நிலையில் மீதமுள்ள 10 சதவிகித பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு விடுகளை வாங்கியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசியவர் 1300 ஸ்கொயர் பீட் முதல் 1600 ஸ்கொயர் பீட் வரையில் கட்டப்பட்டுள்ள இந்த ஒவ்வொரு வீடும் ஒரு 1கோடியே 38 லட்சம் முதல் 1 கோடியே 50 லட்சம் வரையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

    மேலும் தமிழகத்தில் வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்ட 61 இடங்களில் உள்ள வாடகை குடியிருப்பு கள் பழுதடைந்து உள்ளதாகவும் பழுதடைந்து உள்ள இந்த அடுக்குமாடி குடியிருப்பீர்கள் இடித்துவிட்டு அதிக வீடுகள் கொண்ட மாடி குடியிருப்புகளாக நவின முறையில் தற்போதைக்கு ஏற்ற வகையில் கட்டி கொடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

    இதே போல் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் கட்டி முடிக்கப்பட்டு விற்பனையாகாமல் உள்ள 8ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை விற்பனை செய்ய ‌ உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதோடு மட்டுமின்றி இனிவரும் காலங்களில் வீட்டு வசதி வாரியத்தால் கட்டி முடிக்கப்படும் வீடுகள் விற்பனை செய்யாமல் இருக்காத வகையில் கட்டுப்படும் அனைத்து வீடுகளும் விற்கப்படும் நிலையை உருவாக்க தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துறை அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

    இந்த செய்தியாளர் சந்திப்பின் போது தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துறை மேலாண் இயக்குனர் சரவணவேல் ராஜ் மற்றும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய துறை தலைவர் பூச்சி முருகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    தொடரும் பாண்லே பால் தட்டுப்பாடு; கல்வீச்சு தாக்குதல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....