Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்தொடரும் பாண்லே பால் தட்டுப்பாடு; கல்வீச்சு தாக்குதல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

    தொடரும் பாண்லே பால் தட்டுப்பாடு; கல்வீச்சு தாக்குதல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

    புதுச்சேரியில் தொடர்ந்து நிலவி வரும் பாண்லே பால் தட்டுப்பாட்டை போக்க கோரி பொதுமக்கள், சமூக அமைப்பினர், பால் முகவர்கள் பாண்லே தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு கல்வீசி தாக்கி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    புதுச்சேரி மாநிலத்தில் பால் தேவையானது நாள் ஒன்றுக்கு ஒரு லட்சத்து 5 லிட்டராக உள்ளது. இதில் 90 ஆயிரம் லிட்டர் பொதுமக்களுக்கு நேரடியாக சப்ளை செய்யப்படுகிறது. மீதமுள்ள பால், பால்பொருட்கள் உற்பத்திக்கு பயன்படுகின்றன. மாநிலத்தில் மட்டும் சுமார் 65 ஆயிரம் லிட்டர் பால் உற்பத்தி ஆகிறது. மீதி பால் தமிழகத்தின் ஆவின் மற்றும் தனியாரிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.

    சமீபத்தில் தமிழகத்தில் பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டதால் அவவ்வப்போது புதுச்சேரியில் பால் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் பால் கிடைக்காமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் கடந்த சில மாதங்களாகவே பாண்லே பால் தட்டுப்பாடு நிலவி வருகிறது. எனவே பல் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என கோரி முகவர்கள் ஏற்கனவே போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில் இன்று பால் முகவர்கள், பல்வேறு சமூக அமைப்பினர், பொதுமக்கள் ஒன்றிணைந்து மிஷன் வீதியில் உள்ள பாண்லே அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திடீரென அவர்கள் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அவர்ர்கள் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும், பாண்லே நிர்வாகியை மாற்ற வேண்டும், பால் விற்காத பால் பூத்துகளை மூட வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    மேலும் தடையில்லாமல் பால் வழங்க வேண்டும் என கோஷங்களை எழுப்பிய அவர்கள், அப்போது ஒரு நபர் கூட்டத்தில் இருந்து பாண்லே பூத் கண்ணாடியை கல் வீசி தாக்கி உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு பாதுகாப்பில் இருந்த போலீசார் போராட்டக்காரர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

    செல்போனை திருடியதாக இளைஞரை ரயிலில் இருந்து தள்ளிவிட்ட நபர் கைது

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....