Saturday, March 23, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாசெல்போனை திருடியதாக இளைஞரை ரயிலில் இருந்து தள்ளிவிட்ட நபர் கைது

    செல்போனை திருடியதாக இளைஞரை ரயிலில் இருந்து தள்ளிவிட்ட நபர் கைது

    உத்தரபிரதேச மாநிலம், ஷாஜஹான்பூரில் ரயில் ஒன்றில், செல்போனை திருடிய நபர் ஒருவரை அங்கிருந்த பயணி, அவரை ரயிலில் இருந்து தள்ளிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    தில்லியில் இருந்து அயோத்தியா சென்று கொண்டிருந்த ரயிலில் பயணித்த இளைஞர் ஒருவர் அங்கிருந்த ஒரு பெண் பயணியின் செல்போனை திருடி எடுத்து வைத்துக்கொண்டார். இதையடுத்து, தனது செல்போனை காணாமல் பதறிய அந்தப் பெண் பயணி, அருகில் இருந்தவர்களிடம் சொல்லி, அனைவரும் தேடினர். 

    அந்த சமயத்தில், செல்போனை எடுத்த அந்த இளைஞரை அவர்கள் கண்டுபிடித்தனர். மேலும் அவரை அடித்து உதைத்தனர். அதில் அங்கிருந்த பயணி ஒருவர், அவரை சரமாரியாக அடித்து ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டார். 

    அப்போது ரயில் தில்ஹார் ரயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, ரயில் கம்பத்தின் மீது அந்த நபரின் தலை மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். 

    இந்தச் சம்பவம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டு, விசாரணை நடைபெற்றதில், இளைஞரை ரயிலில் இருந்து கீழே தள்ளிய நரேந்திர துபே என்ற நபர் கைது செய்யப்பட்டார். மேலும் அவரை கைது செய்ய ஆதாரமாக இளைஞரை கீழே தள்ளும் காணொளி கிடைத்தது.

    ‘வரலாற்றில் மிகச்சிறந்த இறுதிப்போட்டி…’ – உலகக் கோப்பை கால்பந்து குறித்து மு.க.ஸ்டாலின் ட்வீட்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....