Thursday, March 21, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்'வரலாற்றில் மிகச்சிறந்த இறுதிப்போட்டி...' - உலகக் கோப்பை கால்பந்து குறித்து மு.க.ஸ்டாலின் ட்வீட்..

    ‘வரலாற்றில் மிகச்சிறந்த இறுதிப்போட்டி…’ – உலகக் கோப்பை கால்பந்து குறித்து மு.க.ஸ்டாலின் ட்வீட்..

    நேற்று நடைபெற்ற கால்பந்து உலகக் கோப்பை குறித்த தனது பார்வையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

    கத்தாரில், நடந்து வந்த கால்பந்து உலகக் கோப்பை போட்டியானது நேற்றுடன் முடிவடைந்தது. இப்போட்டியின் ஆரம்பத்தில், தலா 4 அணிகள் கொண்ட 8 பிரிவுகள் என மொத்தம் 32 அணிகளுடன் கடந்த நவம்பர் 20-ஆம் தேதி தொடங்கி, டிசம்பர் 18-ஆம் தேதியான நேற்று முடிவடைந்தது. 

    நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்புக்கு துளியும் பஞ்சமில்லாத அளவு இந்த இறுதிப்போட்டியானது இருந்தது.

    இரு அணியினரும் திறம்ப விளையாட, இறுதியில் பெனால்டி சூட் அவுட் முறையில் 4-2 என்ற கணக்கில் அர்ஜென்டினா அணி வெற்றிப்பெற்று உலகக் கோப்பையை கைப்பற்றியது. 

    இந்நிலையில், நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டி குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார். 

    அதன்படி, அவர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது;

    என்ன ஒரு சிறப்பான போட்டி இது, உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில், இறுதிவரை சோர்ந்து போகாமல் போராடிய பிரான்ஸ் அணியின் ஆட்டமும், எம்பாப்பேயின் ‘ஹாட்ரிக்’ கோலும் கால்பந்து உலகக்கோப்பை வரலாற்றில் மிகச்சிறந்த இறுதிப்போட்டிகளில் ஒன்றாக மாறிவிட்டது. 

    ஃபிஃபா உலகக் கோப்பையை வென்றுள்ள அர்ஜென்டினா அணிக்கும், அணியின் கேப்டன் மெஸ்ஸி அவர்களுக்கும் எனது வாழ்த்துகள். சிறப்புப் பாராட்டுக்குரியவர், கோல் கீப்பர் மார்டினெஸ்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

    புரோ கபடி லீக்; புனேரி பல்தானை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றிய ஜெய்பூர்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....