Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஇப்படியும் ஒரு ஆசையா? மப்பில் மல்லாக்க படுத்து நடுரோட்டில் வாலிபர் செய்த ரகளை..!

    இப்படியும் ஒரு ஆசையா? மப்பில் மல்லாக்க படுத்து நடுரோட்டில் வாலிபர் செய்த ரகளை..!

    மதுரையில் தன்னை யாரும் மதிக்கவில்லை என சொல்லி, கைது செய்யுமாறு மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். 

    மதுபோதையில் சிலர் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் செய்வார்கள். அதிலும் குடித்த பிறகுதான் அவர்களது மனதில் உள்ள சந்தோசம், ஏக்கம், துக்கம் என அனைத்தையும் உளறி கொட்டுவார்கள். அது மட்டுமா குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு என்று சொல்லியெல்லாம் கேள்விப்பட்டிருப்போம். அப்படி பல குடிமகன்கள் செய்யும் சேட்டைகளை நாம் காணொளிகளாக பார்த்திருப்போம் அல்லது நேரில் கண்டு கூட நகைச்சுவை செய்திருப்போம். 

    அப்படி ஒரு சம்பவம் மதுரை மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. மதுரை செக்கானுரணி பகுதியில் காவல் நிலையத்தின் முன்பே போதையில் வாலிபர் ஒருவர் ரகளையில் ஈடுபட்டார். தன்னை கைது செய்ய சொல்லி அவர் நடு ரோட்டில் மல்லாக்க படுத்து அடம் பிடித்தார். 

    வடக்கம்பட்டி ஊரைச் சேந்தவர் வாலிபரான நல்லகுரும்பன், “குடும்பத்தில் என்னை யாரும் மதிக்கவில்லை. அதனால், என்னை கைது செய்யுங்கள். கைது செய்து உடனே சிறையில் அடையுங்கள்” என கெஞ்சி கதறியுள்ளார். காவல்துறையினர் அவரை விரட்டிவிட்டும், மீண்டும் காவல்நிலைய எதிரே உள்ள நடு ரோட்டில் படுத்து, “கைது செய்யவில்லை என்றால் நான் இங்கிருந்து எழுந்திருக்க மாட்டேன்” என போராடியுள்ளார். 

    பிறகு அவரை காவல்துறையினர், சிறையில் வைத்து, நல்லகுரும்பனுக்கு போதை தெளிந்தவுடன் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டார். 

    இந்தக் காலத்தில் இளைஞர்கள் பலர் தன்னை யாரும் புரிந்துகொள்ளவில்லை என மன அழுத்தம் காரணமாக இவ்வாறாக மதுவுக்கு அடிமையாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

    இதையும் படிங்கமழை வெள்ளத்தால் ஏற்படும் உயிர் சேதங்களுக்கு நிவாரணம் அறிவிப்பு: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....