Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்சீர்காழி, தரங்கம்பாடி மக்களுக்கு நிவாரணம் அறிவித்த மு க ஸ்டாலின்: குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000...

    சீர்காழி, தரங்கம்பாடி மக்களுக்கு நிவாரணம் அறிவித்த மு க ஸ்டாலின்: குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்க உத்தரவு

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தரங்கம்பாடி வட்டங்களில் மழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவருக்கும் ரூபாய் ஆயிரம் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.இதனால் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, தரங்கம்பாடி உள்ளிட்ட 108 இடங்களில் கனமழை பெய்துள்ளது.அதிலும் குறிப்பாக 21 மாவட்டங்களில் விசய நிலங்களில் தண்ணீர் சூழ்ந்து விவாசியிகள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர்.இதுமட்டுமின்றி குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்களும் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

    இந்நிலையில் நூற்றாண்டுகளில் இல்லாத அளவிற்கு சீர்காழியில் ஒரே நாளில் 44 செமீ பெய்த கனமழையால் அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.இதனை நேரில் சென்று ஆய்வு செய்த தமிழக முதலமைச்சர் அப்பகுதி மக்களுக்கு நிவாரண உதவிகளை அறிவித்து வருகிறார்.

    அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் மழையினால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக முதலமைச்சர் அந்த வட்டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவருக்கும் ரூபாய் ஆயிரம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

    இன்று (14.11.2022) மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பின்னர் முதலமைச்சர் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

    மேலும் கடும் மழையினால் சேதமடைந்துள்ள பயிர்கள் முறையாக கணக்கெடுப்பு செய்யப்பட்டு, உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்கதலைமைத்திறன் பயிற்சி முகாம்: புதுச்சேரி கூட்டுறவுத்துறை ஏற்பாடு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....