Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுவிடைத்தாள்களை திருத்தும்பொழுது ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை

    விடைத்தாள்களை திருத்தும்பொழுது ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை

    விடைத்தாள்களை திருத்தும்பொழுது ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதித்து கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

    அரசுத் தேர்வுத்துறை இயக்ககம் விடைத்தாள்களை திருத்தும்பொழுது, கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. 

    விடைத்தாள் திருத்தும் மையத்திற்கு உள்ளே வரும் ஆசிரியர் பணி முடியும் வரை வெளியே செல்லக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

    மேலும் மாணவர்களுக்கான மதிப்பெண்களை அதிகமாகவோ அல்லது குறைத்தோ வழங்கக்கூடாது எனவும், முறையாக மதிப்பீடு செய்து சரியான மதிப்பெண்களை மட்டுமே வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

    விடைத்தாள் மதிப்பீடுகளில் தவறு நேர்ந்தால் விடைத்தாள் திருத்தப்பணி மையத்திற்கு பொறுப்பாக உள்ள ஆசிரியர் பொறுப்பேற்க வேண்டும். விடைத்தாள் திருத்தும்போது செல்போன் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். விடைத்தாள் திருத்தும்போது தேவையின்றி பேசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

    தமிழ்நாடு முழுவதும் 12 ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் 79 மையங்களில் வரும் என ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    வேங்கைவயல் சம்பவம்; ஒரு நபர் ஆணையம் அமைக்க நீதிமன்றம் உத்தரவு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....