Wednesday, March 20, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்மாவீரன் படத்தின் அப்டேட்.. 'டாட்டா' காட்டும் சிவகார்த்திகேயன்

    மாவீரன் படத்தின் அப்டேட்.. ‘டாட்டா’ காட்டும் சிவகார்த்திகேயன்

    மாவீரன் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்பான அனைத்து காட்சிகளும் படமாக்கப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. 

    டாக்டர், டான் என வரிசையாக வெற்றித்திரைப்படங்களை கொடுத்த சிவகார்த்திகேயன் சமீபத்தில் வெளிவந்த பிரின்ஸ் திரைப்படத்தின் மூலம் சற்றே சறுக்கலை சந்தித்தார். இந்நிலையில், இந்த சறுக்கலுக்கு நேரெதிராக வெற்றி பெற வேண்டுமென்ற நோக்கத்தில் தற்போது சிவகார்த்திகேயன் இயங்கி வருகிறார். 

    சிவகார்த்திகேயன் தற்போது, தேசிய விருது பெற்ற இயக்குநர் மடோனா அஸ்வின் இயக்கத்தில் ‘மாவீரன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மடோனா அஸ்வின் முன்னதாக யோகிபாபு நடிப்பில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற ‘மண்டேலா’ என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். 

    வித்தியாசமான கூட்டணியாக சிவகார்த்திகேயன்-மடோனா அஸ்வின் கூட்டணி இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் திரைப்படத்தின் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும், மாவீரன் திரைப்படத்தில் பிரபல இயக்குநர் மிஷ்கின், சரிதா, யோகிபாபு போன்றோர் நடிக்கிறார்கள். இதில் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நாயகியாக நடித்துள்ளார். 

    தெலுங்கு மற்றும் தமிழில் பைலிங்குவல் முறையில் உருவாகி வரும் இப்படம், தெலுங்கில் ‘மாவீருடு’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ‘ஆடை’, ‘மண்டேலா’ ஆகிய படங்களுக்கு இசையமைத்த பரத் ஷங்கர் இசையமைக்கிறார். 

    இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்பான அனைத்து காட்சிகளும் படமாக்கப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும், மாவீரன் படம் பக்ரீத் வெளியீடாக திரைக்கு வருமெனவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    ஐபிஎல் தொடரில் புதிய விதிமுறை; முழுத் தகவல் இதோ..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....