Wednesday, May 8, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்உணவு வகைகள் குறித்த வாக்கெடுப்பு; இந்தியாவுக்கு கிடைத்த அங்கீகாரம்...

    உணவு வகைகள் குறித்த வாக்கெடுப்பு; இந்தியாவுக்கு கிடைத்த அங்கீகாரம்…

    உணவு வகைகள் குறித்த பட்டியலில் உலகளவில் இந்தியாவுக்கு ஐந்தாவது இடம் கிடைத்துள்ளது. 

    உணவு என்பது எங்குமே வெறுமனே ஒரு உணவாக இல்லை. உணவு ஒரு கலாசாரத்தை நேரடியாகவோ, மறைமுகமாகவோ பிரதிபலிப்பதாகவே உள்ளது. இது இந்தியாவுக்கும் மட்டும்தானா? என்றால் இல்லை. உலகம் முழுவதும் இது பொருந்தும். 

    மேலும், உணவின் மீதான காதல் என்பது உலகளவில் மக்களிடையே உள்ள வேறுபாடுகளை களைந்து ஒற்றுமையை உருவாக்கும் முக்கிய அங்கமாக இருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரையில், பல வித உணவு வகைகள் உள்ளன. 

    இந்த உணவு வகைகள் உலகம் முழுவதும் பெரும் பிரியங்களை சம்பாதித்து வைத்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த உண்மையை மீண்டும் நிரூபனம் செய்யும் வகையில் இந்தியாவுக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது. 

    உணவு சார்ந்த அங்கீகாரங்களை டேஸ்ட் அட்லஸ் (taste atlas) எனும் அமைப்பு அறிவித்து வருகிறது. அந்த வகையில் உலகளவில், இந்தியாவுக்கு ஐந்தாவது இடம் கிடைத்துள்ளது. இந்த அங்கீகாரமானது நுகர்வோர்களின் ஓட்டுக்கள் அடிப்படையில் கிடைத்துள்ளது. 

    டேஸ்ட் அட்லஸ் வெளியிட்டுள்ள பட்டியலில், இத்தாலி முதலிடத்திலும், கீரிஸ் இரண்டாவது இடத்திலும், ஸ்பெயின் மற்றும் ஜப்பான் முறையே மூன்று மற்றும் நான்காவது இடங்களில் உள்ளன. 

    வாரிசு இசைவெளியீட்டு விழாவில் விஜய் சொன்ன குட்டிக்கதை… இணையத்தில் வைரல்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....