Monday, March 25, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஇந்திய ராணுவத்திற்கு புதிய ஏவுகணைகள்.. ஒப்புதல் அளித்த பாதுகாப்புத்துறை

    இந்திய ராணுவத்திற்கு புதிய ஏவுகணைகள்.. ஒப்புதல் அளித்த பாதுகாப்புத்துறை

    இந்திய ராணுவத்திற்கு 120 பிரளய் ஏவுகணைகள் வாங்க மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. 

    இந்திய-சீன எல்லையில் கடந்த சில மாதங்களாகவே பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பிரளய் ஏவுகணைகள் வாங்க ராணுவத்திற்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஏவுகணைகள் நிலத்தில் இருந்து மற்றொரு நில இலக்கை தாக்கக்கூடிய புதிய தலைமுறை ‘பிரளய்’ ஏவுகணைகள் ஆகும். இவை 150 முதல் 500 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று இலக்கினை அடையும். 

    இந்த ஏவுகணைகள் இந்திய உந்துவிசை ஏவுகணை திட்டத்தின்கீழ் ‘பிருத்வி’ ஏவுகணையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது ஆகும். மேலும், இந்த ஏவுகணைகள் அதிநவீன மோட்டார் மற்றும் புதிய தொழிநுட்பங்களைக் கொண்டுள்ளன. 

    சமீபத்தில் இது தொடர்பாக கடற்படை தளபதி ஹரிகுமார் தெரிவிக்கையில், “எல்லையில் எதிரிகளை எதிர்கொள்வதற்காக அதிகப்படியான ஏவுகணைகளை தயாரித்து தயார் நிலையில் வைக்க மறைந்த முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் சிறப்பு திட்டமே வைத்திருந்ததாக சுட்டி காட்டியிருந்ததாக” கூறியது குறிப்பிடத்தக்கது. 

    120 பிரளய் ஏவுகணைகள் வாங்க ராணுவத்திற்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், வெகு விரைவில் ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டு இந்திய சீன எல்லையில் தயார் நிலையில் நிறுத்தப்படும் என பாதுகாப்பபு அமைச்சக வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது. 

    முன்னதாக, ராகுல் காந்தி நேற்று ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுடன் உரையாடிய போது, பாகிஸ்தானும் சீனாவும் சேர்ந்து இந்தியாவுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கலாம் என தெரிவித்திருந்தார்.

    வாரிசு இசைவெளியீட்டு விழாவில் விஜய் சொன்ன குட்டிக்கதை… இணையத்தில் வைரல்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....