Monday, March 25, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்'குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு திருமணம்? ' - அமைச்சரின் பேச்சுக்கு ராமதாஸ் ஆதரவு!

    ‘குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு திருமணம்? ‘ – அமைச்சரின் பேச்சுக்கு ராமதாஸ் ஆதரவு!

    மத்திய அமைச்சர் கௌஷல் கிஷோரின் வலி நிறைந்த வார்த்தைகளை  ஆட்சியாளர்களும், பொதுமக்களும் திறந்த மனதுடன் ஆய்வு செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    உத்தரபிரதேச மாநிலம் லம்புவா சட்டமன்ற தொகுதியில் நேற்று நடைபெற்ற போதைப்பழக்க மறுவாழ்வு நிகழ்ச்சியில் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார மத்திய இணையமைச்சர் கௌஷல் கிஷோர் கலந்துகொண்டார். 

    அப்போது அவர், தனது மகன் குடிபோதையின் காரணமாக உயிரிழந்ததாகவும், தம்மால் தமது மகனையே மீட்க முடியாமல் போனதாகவும் கூறியிருந்தார். மேலும் குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு உங்கள் வீட்டு பெண்களை திருமணம் செய்து வைக்காதீர்கள் என்றும், குடிப்பழக்கம் உள்ள அதிகாரிகளைவிட, அந்தப் பழக்கம் இல்லாத ரிக்ஷகாரர் அல்லது கூலித்தொழிலாளி நல்ல மாப்பிள்ளை தான் என்று கூறி இருந்தார். 

    இந்நிலையில், மருத்துவர் ராமதாஸ், மத்திய அமைச்சர் கௌஷல் கிஷோரின் வலி நிறைந்த வார்த்தைகளை  ஆட்சியாளர்களும், பொதுமக்களும் திறந்த மனதுடன் ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    மேலும், இது தொடர்பாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தனது, ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: 

    உங்கள் மகளையோ, சகோதரியையோ  குடிப்பழக்கம் உள்ள உயரதிகாரிக்கு மணம் முடிப்பதை விட, குடிப்பழக்கம் இல்லாத தொழிலாளிக்கோ, ரிக்‌ஷா ஓட்டுபவருக்கோ திருமணம் செய்து கொடுங்கள் என்று மத்திய இணையமைச்சர் கௌஷல் கிஷோர் கூறியிருக்கிறார். 

    அவரது வார்த்தைகள் உண்மையானவை. மத்திய அமைச்சரின் வார்த்தைகள் வலி நிறைந்தவை. அவர் எம்.பியாக இருந்த போது அவரது மனைவி எம்.எல்.ஏ. ஆனாலும் மதுவுக்கு அடிமையான மகனை மீட்க முடியவில்லை. இளம் வயதில் அவர் இறந்தார். இளம் வயதில் மருமகள் கைம்பெண் ஆனார். அப்போது அவர்கள் குழந்தையின் வயது 2.

    இதே கொடுமை தான் தமிழகத்தில் தெருவுக்கு தெரு நடந்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் இளம் கைம்பெண்கள் அதிகம் உள்ள மாநிலம் தமிழ்நாடு தான். சாலை விபத்துகள், தற்கொலைகள், மன நல பாதிப்புகள் ஆகியவற்றில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதற்கும் மதுவே காரணம்.

    மத்திய அமைச்சர் கௌஷல் கிஷோரின் வலி நிறைந்த வார்த்தைகளை  ஆட்சியாளர்களும், பொதுமக்களும் திறந்த மனதுடன் ஆய்வு செய்ய வேண்டும். குடிப்பழக்கம் உள்ளவர்கள் புத்தாண்டில் அல்ல.. நாளை அல்ல.. இன்றே, இந்த நிமிடமே  மதுப்பழக்கத்தை கைவிட வேண்டும்.

    மதுவால் நாடு சீரழிவதைத் தடுக்கும் பொறுப்பு அரசுக்கு தான் கூடுதலாக உள்ளது. இளம்பெண்கள் கைம்பெண்களாவதையும், குழந்தைகள் ஆதரவற்றவர்கள் ஆவதையும் தடுக்க தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூட வேண்டும். தமிழக மக்களுக்கு புத்தாண்டு பரிசாக அதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும்.

    இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார். 

    அஸ்வின் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயரால் மீண்ட இந்தியா…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....