Monday, March 18, 2024
மேலும்
    Homeஆன்மிகம்தஞ்சை பெரிய கோவிலில் கொடியேற்றம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு!

    தஞ்சை பெரிய கோவிலில் கொடியேற்றம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு!

    சித்திரை திருவிழா நம் தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் மிகப் பெரிய திருவிழாவாகும். பல்வேறு கோவில்களில் இத்திருவிழா பலவிதமாக கொண்டாடப்படும். மதுரை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமிக்கு முதல் பத்து நாளில் இத்திருவிழா மிகவும் கோலாகலமாக நடைபெறும். இந்த இடத்தில் மட்டும் அல்ல, தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலும் இத்திருவிழா நடத்தப்படுகிறது. 

    தஞ்சையை ஆண்ட ராஜ ராஜ சோழன் என்கிற அருள்மொழிவர்மன் சோழ நாட்டு தென்கரை காவிரி ஆற்றில் தஞ்சை பெரிய கோவிலை கட்டினார். தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா மிகவும் கோலாகலமாக கொண்டாப்படும். பிரசித்தி பெற்ற இத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த பிப்ரவரி மாதம் 7 ஆம் தேதி இதற்கான பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது. இதனை அடுத்து இன்று காலை 6 மணி முதல் 7 மணிக்குள் தஞ்சை பெரிய கோவிலின் கொடிக் கம்பத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. 

    முதலாவதாக பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டது. பின்பு பஞ்ச மூர்த்திகளைக் கோவில் வளாகத்திற்கு கொண்டு வந்து தீப ஆராதனை காட்டப்பட்டது.மேலும் சிவ ஆலயத்தின் மங்கள வாத்தியங்கள் முழங்கபட்டது. பக்கதர்கள் பலர் பஞ்ச மூர்த்திகளை வழிபாடு செய்தனர். மேலும் இன்று மாலை 6.30 மணியளவில் விநாயகர் புறப்பாட்டு ஊர்வலம் நடைபெற உள்ளது. 

    இதனைத் தொடர்ந்து வருகின்ற ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதியான சித்திரை 1 அன்று தேரோட்டம் நடைபெற உள்ளது. மேலும் சித்திரை 1 ஆம் தேதி காலை 6.30 மணியளவில் தியாகராசர் பெருமானும் கமலாம்பாள் தேவியும் கந்தர் புறப்பாடும் நடைபெற உள்ளது. மேலும் 5.45 மணியளவில் தியாகராச சுவாமி அம்பாள் தேரில் எழுந்தருளி மக்களைக் காண வரவுள்ளார். இத்திருவிழாவில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக் கொள்வார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

    தஞ்சை பெரிய கோவிலின் தேரோட்டம் சோழர் காலம் முதலே கொண்டாப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அது மட்டும் அல்லாமல் கி.பி 18 ஆம் நூற்றாண்டில் இக்கோவிலின் தேரோட்டம் நடைப்பெற்றதற்கான சான்றுகளும் உள்ளன. கி.பி 19 மற்றும் 20 நூறாண்டுகளிலும் தேரோட்டங்கள் நடைப்பெற்றதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. 

    இதையும் படியுங்கள்,

    பெண்கள் கட்டாயம் தெரிந்துக் கொள்ள வேண்டிய 5 ஆன்மிக குறிப்புகள்:

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....