Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஐபிஎல் - இன்றையப் போட்டித் துவங்கும் முன்பே இவ்வளவு சுவாரஸ்யங்களா? தகவல்கள் உள்ளே!

    ஐபிஎல் – இன்றையப் போட்டித் துவங்கும் முன்பே இவ்வளவு சுவாரஸ்யங்களா? தகவல்கள் உள்ளே!

    கடந்த 26 ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்ட ஐபிஎல் தொடர் வேகமாக அதே சமயம் விறுவிறுப்பாக நடந்துவருவதை நாம் அறிவோம். நடைபெற்று வரும் பதினைந்தாவது ஐபிஎல் தொடரில் அனைத்து அணிகளும் தங்களின் முதல் போட்டிகளை விளையாடிவிட்டன. வெற்றி தோல்வி என புள்ளிப்பட்டியல் கணக்கீடும் தொடங்கிவிட்டது.

    இத்தொடரில் இதுவரை நடந்துள்ள ஐந்து போட்டிகளின் நிலவரப்படி, ராஐஸ்தான் ராயல்ஸ் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திலும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புள்ளிப்பட்டியலில் இறுதியிலும் உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது ஏழாம் இடத்தில் உள்ளது. 

    இன்றையப் போட்டி 

    இந்நிலையில், ஐபிஎல் போட்டியில் இன்று நடைபெற இருக்கும் ஆறாவதுப் போட்டியில் பெங்களுர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. 

    டு பிளெசிஸ் தலைமையில் பெங்களுர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி இந்த ஐபிஎல் தொடரில் களம் கண்டுவருகிறது. முதல் போட்டியின் போது பேட்டிங்கில் ஆபாரத்திறமையை வெளிப்படுத்திய பெங்களுர் அணி, பந்துவீச்சில் சொதப்பியது. இதனால் 205 ரன்கள் அடித்தும் பெங்களுர் அணி, பஞ்சாப் அணியிடம் தோற்றது.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இந்த ஐபிஎல் தொடரை வெற்றிக்கணக்கோடு தொடங்கியிருக்கிறது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில் கொல்கத்தா அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றே கூற வேண்டும். 

    பெங்களுர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு கிளன் மெக்ஸ்வெல் இல்லாதது பெரும் இழப்பாகவே பார்க்கப்படுகிறது.  கொல்கத்தா அணியிலும் பேட் கம்மின்ஸ், ஃபின்ச் போன்றோர் இல்லாதது பின்னடைவாகவே கருதப்படுகிறது. 

    முதல் வெற்றியை பதிவு செய்யும் நோக்கில் பெங்களுர் அணியும், அடுத்த வெற்றியை இன்னும் வீரியமாய் ருசிக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் தயாரகி வருகிறது.

    சுவாரஸ்யங்கள்  
    • இதுவரை இரு அணிகளும் நேருக்கு நேர் மோதியதில் 13 முறை பெங்களுர் அணியும் 16 முறை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் வெற்றிப்பெற்றுள்ளது. 
    • இறுதிப் போட்டி உட்பட கடந்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக டு பிளெசிஸ் இரண்டு முறை ஆட்ட நாயகன் விருதை வென்றுள்ளார்.
    • முகமது சிராஜ் தனது கடைசி பத்து ஐபிஎல் ஆட்டங்களில் பவர்பிளேயில் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை என்பதும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
    •  215.12 மற்றும் 196.43  என ஆபாரமான பேட்டிங் ஸ்டிரைக் ரேட்டுகளை ஆண்ட்ரே ரசல் மற்றும் சுனில் நரைன் பெங்களுர் அணிக்கு எதிராக வைத்துள்ளனர். 
    விளையாடுவர் என்று எதிர்ப்பார்க்கப்படும் வீரர்கள் 

    கொல்கத்தா அணி; வெங்கடேஷ் ஐயர், அஜிங்க்யா ரஹானே, நிதிஷ் ராணா, ஷ்ரேயாஸ் ஐயர் (கே) , சாம் பில்லிங்ஸ், ஆண்ட்ரே ரஸ்ல், ஷெல்டன் ஜாக்சன் (வி), சுனில் நரைன், சிவம் மாவி, உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி.

    பெங்களுர் அணி; ஃபாஃப் டு பிளெசிஸ் (கே), அனுஜ் ராவத், விராட் கோலி, தினேஷ் கார்த்திக் (வி), ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், வனிந்து ஹசரங்கா, டேவிட் வில்லி, ஹர்ஷல் படேல், ஷாபாஸ் அகமது, ஆகாஷ் தீப், முகமது சிராஜ்.

    இப்போட்டியானது, நவி மும்பையில் உள்ள டி. ஒய். பாட்டில் மைதானத்தில் இன்று இரவு 7:30 மணியளவில் நடைபெற உள்ளது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....